புது GST வரிகள்.. ரூ.500, ரூ.1,000 கூட குறைக்கல.. பழைய விலையே இருக்கு.. உடனே இதை பண்ணுங்க.. இல்லனா சிரமம்!
ஜிஎஸ்டி (GST) குறைப்பு செய்யப்பட்டும் ரூ.500, ரூ.1,000 கூட குறைக்கப்படவில்லை, பழைய விலையிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி யாருக்காவது நடந்திருந்தால், அவர்கள் உடனடியாக இதை செய்து முடியுங்கள். புதிய ஜிஎஸ்டி வரி விதிகங்களின்படி பொருட்களை விற்பனை செய்யதவர்கள் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் இருந்தால் போதும், அதை செய்து முடித்துவிடலாம்.
மின்னனு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான வரிகள் செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து, 28 சவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், டிவி, ஏசி, டிஷ் வாஷர்கள் போன்றவற்றை புதிய வரி விகிதத்தில் கஸ்டமர்கள் வாங்கி வருகிறார்கள். இப்படி வாங்கும்போது, பழைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் என்ன செய்யலாம்.

8800001915 என்னும் வாட்ஸ்அப் எண் மூலமாகவும், தேசிய நுகர்வோர் உதவி எண் 1915 மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆனது கூறுகிறது. இதுபோக ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறை (INGRAM) போர்டல் மூலமாகவும் நுகர்வோர்கள் புகார் அளித்தல் மற்றும் கேள்விகளை கேட்கலாம் என்றும் சொல்கிறது.
முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சில் நடைமுறையில் இருந்த 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்னும் 4 அடுக்கு வரி அமைப்பை மாற்றியது. அந்த ஜிஎஸ்டி அமைப்பை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு அமைப்பாக மாற்றியது. இதுபோக ஆடம்பரப் பொருட்களுக்கு தனியாக 40 சதவீதம் வரியும் விதித்துள்ளது.
இந்த ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு காரணமாக மின்னனு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. அதாவது, மின்னணு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிகம் முன்பாத 28 சதவீதமாக இருந்தது. இப்போது, இந்த விகிதத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆகவே, 18 சதவீத வரி மட்டுமே மின்னணு பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது.
மின்னனு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதான வரியில் ஏர் கண்டிஷனர்கள் (Air Conditioners), டெலிவிஷன்கள் (Televisions), மானிட்டர்கள் & புரொஜெக்டர்கள் (Monitors & Projectors) மற்றும் டிஷ் வாஷிங் மெஷின்கள் (Dish wash Mechine) ஆகியவை அடங்குகிறது. குறிப்பாக ஏர் கண்டிஷனர்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல டெலிவிஷன்களுக்கும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த டெலிவிஷன்களுக்கான வரி குறைப்பு ஆனது 32 இன்ச் டிஸ்பிளே கொண்ட டிவிகளுக்கு பொருந்தாது. அதற்கு மேல் இருக்கும் 40 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் போன்ற டிவி மாடல்களுக்கு மட்டுமே குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல எல்இடி டிவிகளுக்கு இந்த குறைக்கப்பட்ட வரிகள் பொருந்துகிறது. இதுபோக மானிட்டர்கள் & புரொஜெக்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, டிவிக்கு மாற்றாக கிடைக்கும் புரொஜெக்டர்களில் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல மானிட்டர்கள் மேலும் மலிவாக கிடைக்கின்றன.
இறுதியாக டிஷ் வாஷிங் மெஷின்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறு. இந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதத்தின்படி பொதுவாக ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையில் 40 இன்ச், 43 இன்ச் டிவிகள், மானிட்டர்கள் & புரொஜெக்டர்கள், டிஷ் வாஷிங் மெஷின்களின் விலை குறைந்துள்ளது.
அதேபோல அதிக விலைக்கு ஏற்ப அதிமாக வரியும் குறைகிறது. ஆகவே, லட்சக்கணக்கில் விலை கொண்ட டிவி மாடல்களுக்கு பல்லாயிரக்கணக்கில் விலை குறைப்பு இருக்கும். இப்படி குறைந்தபட்சம் ரூ.2,500 முதல் அதிகபட்சம் ரூ.85,000 வரையில் டிவி, ஏசி மற்றும் டிஷ் வாஷிங் மெஷின்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications