புதிய GST.. சரிந்தது Smart TV விலைகள்.. இனி இதுதான் 43-inch க்கு மேல் உள்ள மாடல்களின் புதிய விலை!
ஜிஎஸ்டி (GST) குறைப்பின் விளைவாக, நேற்று முதல், அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விலை குறைக்கப்பட்ட பல தயாரிப்புகளில் ஸ்மார்ட் டிவிகளும் (Smart TV) அடங்கும். இதன் கீழ் சோனி, எல்ஜி மற்றும் பானாசோனிக் உள்ளிட்ட முக்கிய ஸ்மார்ட் டிவி உற்பத்தியாளர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவி மாடல்களின் மீது ரூ.85,000 வரை குறிப்பிடத்தக்க விலை குறைப்புகளை அறிவித்துள்ளனர்.
32-இன்ச் என்கிற அளவுக்கு மேல் உள்ள ஸ்மார்ட் டிவிகளுக்கான ஜிஎஸ்டி விகிதக்குறைப்புக்கு நேரடி எதிர்வினையாக இந்த விலைக் குறைப்பு வந்துள்ளது. 32-இன்ச் அளவிற்கு மேல் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட டிவிகளுக்கான வரி விகிதத்தை 28% இலிருந்து 18% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முடிவு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பால் சோனி, எல்ஜி மற்றும் பானாசோனிக் டிவிகளின் விலைகள் எவ்வளவு குறைந்துள்ளது? சோனி இந்தியா நிறுவனம் ஆனது 43-இன்ச் முதல் 98 -இன்ச் வரையிலான அதன் பிராவியா டிவி மாடல்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு ரூ.5,000 முதல் ரூ.71,000 வரை உள்ளது.
43 அங்குலம் பிராவியா 2 மாடல் ஆனது இப்போது ரூ.54,900 க்கு வாங்க கிடைக்கிறது; முன்னதாக இது ரூ.59,900 க்கு வாங்க கிடைத்தது. மேலும் பிரீமியம் 98-இன்ச் பிராவியா 5 மாடல் இப்போது ரூ.8.29 லட்சத்திற்கு விற்கப்படும். இது அதன் முந்தைய விலையான ரூ.9 லட்சத்திலிருந்து குறிப்பிடத்தக்க விலை குறைப்பு ஆகும்.
எல்ஜி நிறுவனம் ஆனது 43-இன்ச் முதல் 100-இன்ச் வரையிலான ஸ்க்ரீன் அளவுகள் கொண்ட மாடல்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.85,800 வரையிலான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 43 இன்ச் மாடல் இப்போது ரூ.28,490 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னதாக இது ரூ.30,990 க்கு வாங்க கிடைத்தது. அதே நேரத்தில் அதன் டாப்-எண்ட் 100-இன்ச் மாடல் ரூ.85,800 குறைக்கப்பட்டு ரூ.4,99,790 என்கிற புதிய விலையில் வாங்க கிடைக்கிறது.
இதேபோல், பானாசோனிக் நிறுவனமும் ரூ.3,000 முதல் ரூ.32,000 வரையிலான விலைக்குறைப்புகளை அறிவித்துள்ளது. அதன் 43-இன்ச் டிவிகளில் சில இப்போது ரூ.33,990 முதல் வாங்க கிடைக்கின்றன. மேலும் டாப்-எண்ட் 75-இன்ச் மாடலின் விலை இப்போது ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.3.68 லட்சமாக குறைந்து உள்ளது.
ஸ்மார்ட் டிவிகளை போலவே சில ஹோம் அப்ளையன்சஸ் (HomeAppliances) விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. சில முன்னணி உற்பத்தியாளர்கள், ரூம் ஏர் கண்டிஷனர்களின் விலையை ரூ.4,500 வரையிலும், டிஷ் வாஷர் மெஷின்களின் விலையை ரூ.8,000 வரையிலும் குறைத்துள்ளனர். இந்த புதிய விலைகள் நேற்று செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
வோல்டாஸ், டைகின், கோத்ரேஜ் அப்ளையன்சஸ், பானாசோனிக் மற்றும் ஹேயர் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆனது ஏற்கனவே திருத்தப்பட்ட விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் ஆனது பல வகையான தயாரிப்புகளின் விற்பனையையும், அவைகளை வாங்குவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறியாதோர்களுக்கு 2025 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி விகிதங்கள் (GST Rates) குறைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முதல் பல வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டி கவுன்சிலின்படி - இனிமேல் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்கிற இரண்டு பரந்த அடுக்குகள் மட்டுமே இருக்கும்.
சின் குட்ஸ் (Sin Goods) என்று குறிப்பிடப்படும், அதாவது பொதுவாக சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படும் பொருட்கள் அல்லது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்று கருதப்படும் அல்லது தார்மீக பார்வையில் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40 சதவீதம் என்கிற மற்றொரு அடுக்கும் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








