Home
News

புது UPI ரூல்ஸ்.. ரூ.2,000 மேல் GST.. அக்.15 முதல் MDR சார்ஜ்.. இதை முதல்ல தெரிஞ்சுகோங்க.. NPCI சொன்னது!

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளில் விதிக்கப்படும் வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate - MDR) மீதான ஜிஎஸ்டி (GST) விதிப்பு குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

கூகுள்பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் வழியாக செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ரூ.2000 மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் என்னும் எம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதி முதல் வசூலிக்கப்பட இருக்கிறது.

புது UPI ரூல்ஸ்.. ரூ.2,000 மேல் GST.. அக்.15 முதல் MDR சார்ஜ்.. இதை!

இதை தனிநபர்கள் செலுத்த வேண்டியது கிடையாது. வணிகர்கள் மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வணிகர் தள்ளுபடி விகிதம் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இதற்கு என்பிசிஐ (NPCI) விளக்கம் அளித்துள்ளது.

எம்டிஆர் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறு வணிகர்கள் பாதிப்படைவார்கள் என்பது முற்றிலும் தவறான தகவலாகும். ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான எம்டிஆர் கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆகவே, அவற்றின் மீது எந்தவித ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படாது. ரூ.2,000 மேலான பரிவர்த்தனைகளில் வணிகர்கள் மட்டுமே எம்டிஆர் கட்டணத்தை செலுத்துவார்கள்.

இந்திய அரசின் தரவுகளின்படி, வணிகர்களின் ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 96 சதவீதத்திற்கும் அதிகமானவை ரூ.2,000 க்கும் குறைவாக மட்டுமே இருக்கின்றன. ஆகவே, பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணமோ அல்லது அதன் மீதான ஜிஎஸ்டி வரியோ செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது.

மேலும், வணிகர்கள் தாங்கள் செலுத்தும் எம்டிஆர் மீதான ஜிஎஸ்டி தொகையை, விற்பனை செய்யும் பொருட்களுக்கான வெளியீட்டு வரியுடன் (Output Tax) உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) முறையில் எளிதாக ஈடுசெய்து கொள்ள முடியும். இதானல் எம்டிஆர் மீது செலுத்தப்படும் ஜிஎஸ்டி செலவை வணிகர்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை.

ஆகவே, எவ்விதமான கூடுதல் நிதி சுமையும் வணிகர்களுக்கு ஏற்படப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரையில் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை வழியாக வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு எம்டிஆர் கட்டணமே கிடையாது. எம்டிஆர் மீதான ஜிஎஸ்டி வரியால் சிறு வணிகர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்பது ஆதாரமற்றது.

பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனைகளும், லட்சக்கணக்கான சிறு வணிகர்களும் இதனால் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள் என்பதே உண்மையாகும் என்று குறிப்பிட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் எக்ஸ் தளத்தில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதி முதல் என்ன நடக்கும்?

தனி நபர்களுக்கு (Person-to-Person) இடையே செய்யப்படும் பரிவர்த்தனைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் வழக்கம்போல செயல்படும். ஆனால், தனிநபர் - வணிகர் (Person-to-merchant) இடையே செய்யப்படும் பரிவர்த்தனைகளில் ரூ.2,000 மேல் சென்றால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.4 சதவீத எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும்.

இதையும் தனிநபர்கள் செலுத்த வேண்டியது கிடையாது. ஆகவே, ரூ.2,100 விலைக்கு பொருட்கள் வாங்கினாலும், ரூ.3000 கொடுத்து பொருட்கள் வாங்கினாலும் அந்த தொகையை மட்டுமே செலுத்தினால் போதும். 0.4 சதவீத எம்டிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டியது கிடையாது. ஆனால், இந்த பணத்தை பெறும் வணிகர்கள் எம்டிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதிலும் மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரையில் பெறும் வணிகர்களுக்கு எம்டிஆர் கட்டணம் பொருந்தாது. அதேபோல அதிகபட்சமாக ரூ.300 வரையில் மட்டுமே எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, ரூ.75,000 மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகளை செய்தால், 0.4 சதவீத எம்டிஆர் கட்டண கணக்குப்படி ரூ.300 வருகிறது. இதுவே அதிகபட்ச கட்டணம். இதற்கு மேல் வசூலிக்கப்படாது.

Best Mobiles in India

English summary
GST on MDR UPI Transactions Up To Rs 2000 Continue To Zero MDR And Zero GST Impact NPCI Clarifies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X