Home
News

இதோ அடுத்தது.. GST 2.0 அமலுக்கு வந்தது.. நவம்பர் 1 முதல் என்னென்ன மாறுகிறது? யாருக்கெல்லாம் லாபம்?

ஜிஎஸ்டி விகிதங்கள் (GST Rates) ஆனது கடந்த 2025 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் கணிசமாக குறைந்ததை தொடர்ந்து, ஜிஎஸ்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) கட்டமைப்பு ஆனது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்திய அரசாங்கமானது, இந்த மாற்றத்தை ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) என்று அழைக்கிறது.

இதன்கீழ் புதிய ஜிஎஸ்டி பதிவு முறை (New GST registration system) ஆனது இன்று (நவம்பர் 1, 2025) முதல் அமலுக்கு வந்தது. இந்த சீர்திருத்தம் ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small, and Medium Enterprises - MSMEs) மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GST 2.0 அமலுக்கு வந்தது.. நவம்பர் 1 முதல் என்னென்ன மாறுகிறது?

அதாவது ஜிஎஸ்டி 2.0-வின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி பதிவு முறை ஆனது மனித தலையீட்டை குறைப்பதையும் மற்றும் மிகவும் நீளமான நடைமுறை தாமதங்களை எதிர்கொள்ளும் சிறு வரி செலுத்துவோருக்கு ஒப்புதல்களை விரைவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. சிறு தொழில்முனைவோருக்கு ஜிஎஸ்டி பதிவு மிகவும் முக்கியமானதாகும். ஜிஎஸ்டி 2.0 வழியாக அந்த நடவடிக்கை - விரைவாகவும், மென்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜிஎஸ்டி பதிவு முறை எவ்வாறு செயல்படுகிறது? ஜிஎஸ்டி 2.0 பதிவு செயல்முறை ஆனது ஒரு விண்ணப்பதாரரின் ஆபத்து அளவை (Risk level of an applicant.) தானாக மதிப்பிடுவதற்கு பல வகையான தரவு புள்ளிகளை (multiple data points) ஒருங்கிணைக்கிறது. இந்த புதிய அமைப்பின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. தானியங்கி இடர் மதிப்பீடு (Automated Risk Assessment): விண்ணப்பதாரர் "குறைந்த ஆபத்து" (Low Risk) அல்லது "அதிக ஆபத்து" (High Risk) என்பதை தீர்மானிக்க, ஏஐ -அடிப்படையிலான வழிமுறைகளை (AI-based algorithms) பயன்படுத்தி விண்ணப்பதாரர் தரவை இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்யும்.

2. ஆதார் மற்றும் பான் அடிப்படையிலான அங்கீகாரம் (Aadhaar and PAN Based Authentication): ஆதார் மற்றும் பான் மூலம் அடையாளத்தின் உடனடி சரிபார்ப்பு ஆனது கைமுறையாக நடத்தப்படும் சரிபார்ப்பை மாற்றும். இது மனித பிழை மற்றும் தாமதங்களை கணிசமாக குறைக்கும்.

3. அரசு தரவுத்தளங்களுடன் ஏபிஐ ஒருங்கிணைப்பு (API Integration with Government Databases): பெருநிறுவன விவகார அமைச்சகம் (Ministry of Corporate Affairs - MCA) மற்றும் வருமான வரித் துறை (Income Tax Department) போன்ற தரவுத்தளங்களுடன் ஒருங்கிணைப்பு நம்பகத்தன்மையை உறுதிசெய்கிறது மற்றும் மோசடியான பதிவுகளை நீக்குகிறது.

4. டிஜிட்டல் தொடர்பு மற்றும் மின்-சரிபார்ப்பு (Digital Communication and E-Verification): விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு நிலை (Registration status) குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளை (Real time updates) மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் பெறுவார்கள், அனைத்து சரிபார்ப்புகளும் மின்னணு முறையில் நடைபெறும்.

5. கண்காணிப்பு மற்றும் குறை தீர்க்கும் டாஷ்போர்ட் (Dashboard for Tracking and Grievance Redressal): வணிகங்கள் தங்கள் ஜிஎஸ்டி விண்ணப்ப முன்னேற்றத்தை கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் அல்லது குறைகள் இருந்தால் அதை ஆன்லைன் வழியாகவே சரி செய்யலாம். இதனால் ஜிஎஸ்டி அலுவலகங்களுக்கு நேரில் வருகை தரும் தேவை குறையும்.

மேற்கண்ட இந்த டிஜிட்டல் டூல்களை பயன்படுத்துவதன் மூலம், அரசாங்கம் சராசரி ஜிஎஸ்டி பதிவு நேரத்தை (Average GST registration time) இரண்டு வாரங்களிலிருந்து மூன்று நாட்களாக குறைத்து, இந்தியாவின் ஜிஎஸ்டி முறையை உலகளவில் மிகவும் திறமையான ஒன்றாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

சிறு வணிகங்களுக்கு ஜிஎஸ்டி 2.0 ஏன் முக்கியமானது? பல ஆண்டுகளாக, சிறு வணிக உரிமையாளர்கள் ஜிஎஸ்டி பதிவிற்காக அதிகம் நேரம் எடுக்கப்படுவது மற்றும் ஆவணங்கள் நிறைந்த செயல்முறை குறித்து கவலைகளை தெரிவித்து வருகின்றனர். முந்தைய ஜிஎஸ்டி பதிவு முறை ஆனது விண்ணப்பதாரர்களுக்கான ஒப்புதலை வழங்க 7 முதல் 15 நாட்கள் வரை எடுத்துக்கொண்டது. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாமே ஜிஎஸ்டி 2.0-வின் கீழ் வியத்தகு முறையில் மாறவுள்ளன!

More from GizBot

Best Mobiles in India

English summary
GST 2.0 Came to Effect New GST Registration System Using AI Digital Communication E-Verification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X