சுற்றுச்சூழலை பாதிக்காத படி தயாரிக்கப்பட்டிருக்கும் கேஜெட்கள்
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தொழில்நுட்ப உலகில் கிடைக்கும் சில கேஜெட்களை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். இவை சாதாரண கேஜெட்கள் இல்லை என்பதோடு இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் சுற்றுச்சூழல் தின சிறப்பு கேஜெட் கருவிகளின் பட்டியல் மற்றும் அவைகளின் புகைப்படங்களை பாருங்கள்..

ReFleece
பழைய பிளாஸ்டிக் மூலம் டேப்ளெட் கவர், ஈரீடர் கேஸ் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.

Phillips HD4644 Cordless Kettle
அதிகம் டீ எடுப்பவர்கள் இந்த கோப்பையை பயன்படுத்தி சரியான அளவு தண்ணீரை சேர்த்து கொள்ள முடிவதோடு இந்த கருவி 66% வரை மின்சாரத்தை சேமிக்கின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

Soladey J3X Toothbrush
இந்த கருவி வெளிச்சத்தின் மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் பல் துலக்க பேஸ்ட் வைக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pilot B2P pens
அதிகபட்சம் 89% மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை கொண்டு இந்த பேனா தயாரிக்கப்படுகின்றது.

Eton BoostTurbine charger
ஹேன்டு-க்ரான்க் சார்ஜர் உங்களது போனிற்க்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்பதை தெரிவிப்பதோடு இதை கையில் எடுத்து செல்லும் படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

Revolve xeMini charger
பல கருவிகளுக்கு சார்ஜ் செய்ய இந்த கருவி ஏற்றதாக இருக்கின்றது. இந்த சார்ஜரை கொண்டு இரு கருவிகளுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். இந்த கருவி மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Urbanears Plattan headphones
பழை ஹெட்போன்களின் பயனற்ற பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை தான் ப்ளாட்டன் ஹெட்போன்கள்.

VIZIO E390-B1 TV
பேக்லைட் சென்சார் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த தொலைகாட்சி அடுத்தாண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

iameco v3 desktop computer
சுமார் 98% மறுசுழற்சி செய்யப்பட்ட பொருச்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கம்ப்யூட்டர் எல்ஈடி லைடிங் பயன்படுத்துகின்றது.


Click it and Unblock the Notifications