தீவிரவாதம் அழியட்டும், அதை ராணுவம் செய்யட்டும்..!

  |

  தீவிரவாதம் போன்ற அழிவு சக்தியானது மிகவும் பலம் வாய்ந்தது போல தான் தோன்றும். ஏனெனில், அவர்களின் ஒரே நோக்கம் அழிவு மட்டும் தான். அவர்களுக்கு அழிக்க மட்டும் தான் தெரியும், 'எதையாவது பாதுகாக்க வேண்டும் என்றால்' - அவர்களால் முடியாது. அதனால் தான் பலர் தங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியாமல் செத்து ஒழிகின்றனர்.

  ஆனால் ராணுவத்தின் நோக்கமும் செயலும் அப்படி இல்லை முதலில் பாதுகாக்க வேண்டும், பின் தான் அழிவு சக்திகளை அழிக்க வேண்டும். அது மட்டுமின்றி தீவிரவாதம் என்பது அரைகுடம் போல அதிகம் கூத்தாடும், ஆனால் ராணுவமோ நிறைகுடம் - அமைதியாக தான் இருக்கும், அது தான் உலக ராணுவங்களின் மாபெரும் வலிமையும் கூட..!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  உலக ராணுவ ஆயுதங்கள் :

  அப்படியாக, மிகவும் அமைதியாக, மிகவும் பலமான அதிநவீன மயமாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ள, உருவாக்க பரிசோதனையில் உள்ள உலக ராணுவ ஆயுதங்களை தான் பின்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

  ஹோவர்பைக்ஸ் (Hoverbikes) :

  ஹெலிகாப்டர்கள் போல ஆற்றல் வளம் கொண்ட ஹோவர்போர்ட்கள்.

  ஸ்மார்ட் கான்ஸ் (Smart Guns) :

  அங்கீகரிக்கப்பட்ட பயனாளியால் மட்டுமே பயன்படுத்த முடியும் படியாக வடிவமைக்கப்படும் ஸ்மார்ட் துப்பாக்கிகள்.

  ஃப்போர் லெக்டு கால்லோபிங் பாட் (Four-legged galloping bot) :

  புலி போல் காட்சியளிக்கும் இந்த ரோபோட் மணிக்கு 16 மீட்டர் வேகத்தில் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  ட்ரான்ஸ்ஃபார்மர் டிஎக்ஸ்/ஏஆர்இஎஸ் (Transformer TX/ARES) :

  தரையிலும் அதே சமயத்தில் ஆகாயத்திலும் பயணிக்க உதவும் ட்ரான்ஸ்ஃபார்மர் கார்கள்.

  சர்க்கோஸ் எக்ஸ்ஸோஸ்கேலிடன் (Sarcos Exoskeleton) :

  இதை அணிந்து கொண்டால் மிகவும் அசாத்தியமான காரியங்களை கூட எளிமையாக செய்ய முடியும்.

  கூகுள் கிளாஸ்..நேவி-ஸ்டைல் (Google Glass...Navy-style) :

  இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் கூகுள் கிளாஸ் இல்லை ராணுவ பயன்பாட்டுக்காகவே (முக்கியமாக கப்பல் படை) வடிவமைக்கப்பட்ட கூகுள் கிளாஸ்.

  ரிஸ்ட் மவுண்டட் கம்ப்யூட்டர் (Wrist-mounted computer) :

  தகவல்களை எளிமையாக, வேகமாக பெற பயன்படுத்தப்படும் கையில் மாட்டிக் கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ள மவுண்டட் கம்ப்யூட்டர் கருவி.

  ஆர்மேட்டிக்ஸ் டிஜிட்டல் ரீவால்வர் (Armatix Digital Revolver) :

  வாட்ச் உடன் இணைப்பு, பிங்கர் பிரிண்ட் தொழில் நுட்பம் என முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்ட கைத்துப்பாக்கி.

  டார்பாவின் பையோனிக் ஆர்ம் (DARPA's Bionic Arm) :

  அமெரிக்க ஆயுத தயாரிப்பு துறையான டார்பாவின் அதிநவீன ரோபடிக் கை..!

  ஆளில்லிலா நீர்மூழ்கி (Autonomous Underwater Submarine) :

  பல வகையான உருவங்களில் கடலுக்குள் உளவு பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஆளில்லா நீர் மூழ்கிகள்.

  எம்32 மல்டிப்பில் கிரேனட் லான்ச்சர் (M32 multiple grenade launcher) :

  நிமிடத்திற்கு 18 கிரேனட்களை ஏறியக்கூடியது, அது மட்டுமின்றி மிகவும் குறைவான சத்தத்தை எழுப்பும்படியாக வடிவமைக்கப்பட்டது.

  ஸ்டீல்த் ஃபைட்டர் ஜெட் (Stealth fighter jet) :

  யார் கண்ணிலும், எந்த ரேடாரிலும் சிக்காத உளவு விமானங்கள்.

  மைக்ரோ ஏர் வெஹிகல்ஸ் (Micro air vehicles) :

  கைக்குள் அடங்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ள உளவு ட்ரோன்கள்.

  கார்னர் ஷாட் (Corner shot) :

  வீடியோ கேமிரா பொருத்தப்பட்ட, வளைந்து கொடுக்க கூடிய கிரேனட் துப்பாக்கி.

  சிலிந்க்ஸ் ஹெட்செட் (Silynx headset) :

  இரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் சிறந்த ஹை-டெக் ஹெட்செட் ஆன இது பிற சத்தத்தை ரத்து செய்து சிறந்த ஒலியை பெற உதவும்.

  எம்110 ஸ்னைப்பர் ரைஃபில் (M110 sniper rifle) :

  இவ்வகை ஸ்னைப்பர்கள் பொது இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை, யுத்த களங்களில் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Great pieces of tech available only to the military. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more