Home
News

(வீடியோ)நிஜத்தில் சூப்பர் ஹீரோ., உயிரை காப்பாற்றும் சோதனை- மலை உச்சியில் பறந்த சூப்பர் ஜெட்!

பிரட்டனை சேர்ந்த கிராவிட்டி நிறுவனம் சூப்பர் ஜெட் என்ற ஆடையை வடிவமைத்துள்ளது. இந்த சூப்பர் ஜெட் பயன்படுத்தி நடைபெற்ற சோதனை வெற்றிப் பெற்றுள்ளது. மலை உச்சியில் சிக்கிக் கொண்ட சிறுமியை காப்பாற்றுவது போன்று ஒரு சோதனை நடைபெற்றது.

சூப்பர் ஹீரோ என்பது ஒருவரின் கற்பனை

சூப்பர் ஹீரோ என்பது ஒருவரின் கற்பனை

சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் என்பது கண்களை திறந்துக் கொண்டு காணும் கனவுதான். சூப்பர் ஹீரோ என்பது ஒருவரின் கற்பனையால் ஆன எழுத்து வடிவமே. கற்பனை கதாபாத்திரம் நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் மாதிரி உடைகள், அதன் சக்திகளின் பிரதிபலிப்புகள் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மார்வெல் காமிக்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ்

மார்வெல் காமிக்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ்

பெரும்பாலான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் மார்வெல் காமிக்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ் உருவாக்கப்படுவதுதான். உலகளவிலான வசூலில் பெரும் சாதனை படைத்த டாப் 25 படங்களை எடுத்துக் கொண்டோம் என்றால் அதில் 9 படங்கள் சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவையே ஆகும்.

அயர்ன்மேன் கதாபாத்திரம்

அயர்ன்மேன் கதாபாத்திரம்

கேப்டன் அமெரிக்கா, சூப்பர் மேன், ஸ்பைடன் மேன், வொல்வோரைன் என சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை வரிசையாக பட்டியலிடலாம். ஒவ்வொருக்கும் ஒரு கதாபாத்திரங்கள் பிடிக்கும் இதில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது அயர்ன்மேன் என்றே கூறலாம்.

கிராவிட்டி எனும் தனியார் நிறுவனம்

கிராவிட்டி எனும் தனியார் நிறுவனம்

இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த கிராவிட்டி எனும் தனியார் நிறுவனம் பறக்கும் வகையிலான சூப்பர் ஜெட் ஆடைகளை உருவாக்கியுள்ளது. சூப்பர் ஜெட் ஆடை ஒருவரை வைத்து பரிசோதனையும் செய்யப்பட்டது.

சூப்பர் ஜெட் ஆடை

சூப்பர் ஜெட் ஆடை

இந்த பரிசோதனையானது சூப்பர் ஜெட் ஆடை அணிந்த ஒருவர் விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பது போன்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையானது வெற்றி அடைந்துள்ளது.

கைகளில் உள்ள இரண்டு இன்ஜின்கள்

சூப்பர் ஜெட் ஆடையில் கைகளில் உள்ள இரண்டு இன்ஜின்கள் திசையை மாற்றி அமைக்கவும் முதுகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் பறக்க வைக்கவும் உதவுகிறது. இதில் வேகக் கட்டுப்பாட்டு கருவியும் உள்ளது. பல மணிநேரங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டிய தூரத்தை சில நொடிகளிலேயே பயணிக்க இந்த ஆடை உதவுகிறது.

90 வினாடிகளிலேயே பறந்து சென்ற நபர்

90 வினாடிகளிலேயே பறந்து சென்ற நபர்

மிக உயர்ந்த மலைப்பகுதியில் 10 வயது சிறுமி சிக்கிக் கொண்டது போன்றும் அதை சூப்பர் ஜெட் ஆடை அணிந்த மருத்துவர் 90 வினாடிகளிலேயே பறந்து சென்று சிறுமையை காப்பாற்றும்படியும் நடைபெற்றது. இந்த சோதனையானது வெற்றிப் பெற்றுள்ளது.

 51 கிமீ வேகமும் 3658 உயரமும்

51 கிமீ வேகமும் 3658 உயரமும்

இந்த சூப்பர் ஜெட் பயன்படுத்தி அதிகப்பட்சமாக 51 கிமீ வேகமும் 3658 உயரமும் பறக்கக் கூடியவை என தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது இருப்பினும் இது மிகவும் பெருமிதம் கொள்ள வைக்கும் விதமான தொடக்கம் என கூறப்படுகிறது.

source: abc.net

Best Mobiles in India

English summary
Gravity Industries Testing Trail Super Jet Suit Going to Saves Life
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X