ஐபோனின் புதிய மாடல்களை இன்கிராம் மைக்ரோ இந்தியாவில் பெறுங்கள்

By Siva
|

இந்தியாவில் தொழில்நுட்ப உபகரணங்களை கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக விநியோகம் செய்து வரும் இன்கிராம் மைக்ரோ இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தற்போது இந்த வருடம் வெளிவந்துள்ள மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8பிளஸ் மாடல்களை விற்பனை செய்ய தயாராகியுள்ளது.

ஐபோனின் புதிய மாடல்களை இன்கிராம் மைக்ரோ இந்தியாவில் பெறுங்கள்

இந்த நிறுவனம் செப்டம்பர் 29, 2017 தேதியில் இருந்து மேற்கண்ட இரண்டு மாடல் ஐபோன்களை சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளதாகவும் இதற்கான முன்பதிவுகளை இன்கிராம் ஷோரூம்களில் செப்டம்பர் 22 2017 தேதியில் இருந்து செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இன்கிராம் நிறுவனம் இதுவரை இந்த மாடல்களின் விலை என்னவென்று அறிவிக்கவில்லை என்றாலும் மிக விரைவில் இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மாடலின் விலை ரூ.45000 என்றும், ஐபோன் 8 பிளஸ் மாடலின் விலை ரூ.61000 என்றும் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே

இந்தியாவில் இந்த இரு மாடல்களின் விலை ரூ.66000 மற்றும் 77000 என இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்(அம்சங்கள்).!5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி க்யு6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்(அம்சங்கள்).!

அதேபோல் இன்கிராம் நிறுவனம் தனது பார்ட்னர் ஸ்டோரில் இருந்து ஐபோன் எக்ஸ் மாடலை 2017, அக்டோபர் 27 முதல் விற்பனை செய்யவுள்ளது. மேலும் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல் இந்தியாவில் உள்ள 1500 இன்கிராம் கிளைகளிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது

ஐபோன் 8 மற்றும் ஐபோன் பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களுமே A11 பயோனிக் சிப் வகையை கொண்டது என்பதால் வேகமான பிராஸசசிங் கொண்ட போனாக இருக்கும். ஐபோன் 8 பிளஸ் மாடலில் டூயல் கேமிரா செட்டப் மற்றும் இரண்டிலும் இமேஜ் ஸ்டெபிலைசன் தன்மை உள்ளது

அதேபோல் ஐபோன் எக்ஸ் மாடல் 5.8 இன்ச் OLED ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டது. பெஸல் லெஸ் தன்மை கொண்ட இந்த போனல் கொண்டது. ஃபேசியல் ரிகக்னேஷன் சிஸ்டம் உள்ள இந்த போன் இருளான இடத்திலும் வேலை செய்யும் தன்மை கொனது

Best Mobiles in India

English summary
Ingram Micro India will release the iPhone 8 and iPhone 8 Plus at its partner stores in India from September 29, 2017.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X