Home
News

GPay, PhonePe-ல் இனி உங்கள் முழு போன் நம்பர் தெரியாது! வருகிறது புதிய UPI விதிகள்.. இதோ முழு விவரம்..

இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற யுபிஐ (UPI) செயலிகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் இந்த யுபிஐ செயலிகள் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக இந்த செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது.

இந்நிலையில் யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

GPay, PhonePe-ல் இனி உங்கள் முழு போன் நம்பர் தெரியாது!

அதாவது Moneycontrol இணையதளத்தில் வெளியான தகவலின்படி, செப்டம்பர் 4-க்குள் அனைத்து யுபிஐ (UPI) செயலிகளும் மற்றும் வங்கிகளும் தேவையான தொழில்நுட்ப மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும். அதன் பிறகு, யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ, பயனரின் முழு மொபைல் எண் திரையில் காட்டப்படாது. அதற்குப் பதிலாக, மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும்.

குறிப்பாக இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், பயனர்களின் தனியுரிமையை மேலும் பாதுகாப்பதாகும். முழு மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல் இருப்பதன் மூலம், தேவையற்ற தனிப்பட்ட தகவல் பகிர்வு குறைக்கப்பட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பும் மேம்படும்.

மேலும், QR குறியீட்டை (QR Code) பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளிலும், பணம் அனுப்பியவர் அல்லது பெற்றவரின் முழு மொபைல் எண் திரையில் காட்டப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு பதிலாக, மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும். இந்த நடைமுறை அனைத்து யுபிஐ செயலிகளிலும் மற்றும் வங்கிகளிலும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட உள்ளது.

அதுவும் இந்த மாற்றத்தின் மூலம், கடைகள், வணிக நிறுவனங்கள் அல்லது அறிமுகமில்லாத நபர்களுடன் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் தேவையின்றி பகிரப்படுவது தவிர்க்கப்படும். இதனால் தனியுரிமை பாதுகாப்பு மேலும் வலுப்பெறுவதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது பயனர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

அதேபோல் மொபைல் எண்ணுக்குப் பதிலாகப் பயனர்பெயர் அடிப்படையிலான யுபிஐ ஐடியை பயன்படுத்துவது, தனியுரிமையை மேலும் பாதுகாக்க உதவும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

GPay, PhonePe-ல் இனி உங்கள் முழு போன் நம்பர் தெரியாது!

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection) DPDP Act-க்கு இணங்க பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகும். மொபைல் எண்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சியளித்ததால், தேவையற்ற அழைப்புகள், ஆன்லைன் மோசடி முயற்சிகள் மற்றும் தனியுரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுவும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, யுபிஐ பரிவர்த்தனைகளின் போது தனிப்பட்ட தகவல்கள் தேவையின்றி பகிரப்படுவது குறையும். இதன் மூலம் பயனர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் முன்பைவிட பாதுகாப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source

Best Mobiles in India

English summary
GPay, PhonePe Users Wont See Full Mobile Numbers From September 4: New UPI Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X