மேக் இன் இந்தியா : சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்க மத்திய அரசு திட்டம்.!

Written By:

மத்திய அரசு தற்போது புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் திட்டம் பணிகள் இந்தியாவில் துவங்கியுள்ளது, என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் பொறுத்தவரை 1988-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, அப்போது முதன்முதலில் பரம் போன்ற சூப்பர் கம்ப்யூட்டர்கள் தான் தயாரிக்கப்பட்டது. இவற்றின் பயன்பாடு 10 ஆண்டுகள் இருந்தது, மேலும் தற்சமயம் அமெரிக்கா, சீனா, ஐரோப்பியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிநவீன தொழில்நுட்ப சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மேக் இன் இந்தியா:

மேக் இன் இந்தியா:

மேக் இன் இந்தியா திட்டம் பொறுத்தவரை இப்போது புதிய சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது, மேலும் இந்த திட்டத்தின் கீழ் அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் நோட் போன்றவை தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரூ.4500 கோடி:

ரூ.4500 கோடி:

இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.4500 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் இந்த திட்டம் செயல்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

 அறிவியல்:

அறிவியல்:

இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதலில் அறிவியல் சார்ந்த ஆராய்கி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் மூன்று கட்டங்களில் இந்த திட்டம் செயல்படும், அதன்பின் 50 சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதலில் தயாரிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு:

பயன்பாடு:

இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாடு பொறுத்தவரை அணு எதிர்வினைகள் சார்ந்த தகவல், வானிலை, பருவ நிலை மாற்றம், போன்ற அனைத்து தகவல்களையும் எளிமையாக அறிந்துகொள்ள முடியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அஷூடோஷ் ஷர்மா:

அஷூடோஷ் ஷர்மா:

தற்போது தயாரிக்கும் இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகமத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் தலைவர் அஷூடோஷ் ஷர்மா தகவல் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Govt targets indigenous supercomputers under 3 phase project ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot