கல்லூரி மாணவர்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களைப் பின்தொடர அரசு முடிவு.!

|

இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் அதிகளவில் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், குறிப்பாகச் செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த சமூகவலைத்தளங்கள் மிகவும் உதவியாய் இருக்கின்றன.

 மனிதவள மேம்பாட்டுத் துறை

மனிதவள மேம்பாட்டுத் துறை

இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அவற்றின் மாணவர்களின் சமூகவலைதளக் கணக்குகளைப் பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.

 900 பல்கலைக்கழகங்கள்

900 பல்கலைக்கழகங்கள்

பின்பு இது குறித்த உத்தரவை சுமார் 900 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறையின் உயர்கல்விப்பிரிவு அனுப்பி உள்ளது. இதில் மாணவர்களின் சமூகவலைத்தள கணக்குகளையும் மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் இணைக்கக் கோரியுள்ளது.

தீப்பிடித்து எறிந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்! பயனரின் டிவிட்டர் பதிவிற்கு ஒன்பிளஸ் அளித்த பதில்!தீப்பிடித்து எறிந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்! பயனரின் டிவிட்டர் பதிவிற்கு ஒன்பிளஸ் அளித்த பதில்!

பதிவாகும் நற்பணிகள்

பதிவாகும் நற்பணிகள்

இத்துறைக்கு சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் கணக்கு ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது, இவற்றுடன் பல்கலைக்கழகங்கள், கல்லூரி மற்றும் அவற்றின் மாணவர்களின் கணக்குகளைச் சேர்ப்பதால் அதில் பதிவாகும் நற்பணிகள் பற்றி அரசு அறிய விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?ஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?

நல்ல செய்திகளை பதிவிட  வேண்டும்

நல்ல செய்திகளை பதிவிட வேண்டும்

குறிப்பாகக் கணக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கல்வி நிறுவனம் பற்றிய நல்ல செய்திகளை வாரத்தில் ஒன்றாவது பதிவிடச் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 ஜீலை 31-ம் தேதிக்கு முன்பாக

ஜீலை 31-ம் தேதிக்கு முன்பாக

மேலும் கணக்கு இல்லாதவர்கள் தொடங்க வேண்டியது டிவிட்டர் மற்றும் முகநூல் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவற்றை ஜீலை 31-ம் தேதிக்கு முன்பாக இணைக்க வேண்டும் எனவும் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த மூன்று சமூகவலைத்தளங்களில், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு ஏற்கனவே கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான டிசைனில் 5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்!அட்டகாசமான டிசைனில் 5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்!

கேம்பஸ் இண்டர்வியூ

கேம்பஸ் இண்டர்வியூ

இருந்தபோதிலும் மாணவர்களின் சுதந்திரமான சிந்தனையில் மத்திய அரசு தலையிடும் வாய்ப்புகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது, மேலும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் கேம்பஸ் இண்டர்வியூ எனப்படும் வளாக நேர்முகத் தேர்வுகளில் மாணவர்களின் முகநூல் பக்கங்களை கண்காணிப்பதையும் பல நிறுவனங்கள் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
govt-set-to-link-up-with-students-of-around-900-universities-and-40000-colleges-on-facebook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X