வோடபோன் வரி விவகாரம்.! 2 வாரம் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு.!

|

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

வோடபோன் வரி விவகாரம்.! 2 வாரம் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு.!

இந்நிலையில் வோடபோன் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹட்சிசன் என்ற மற்றொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை 1,100 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியது. இதற்குவேண்டி ரூ.22 ஆயிரத்து 100 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வோடபோனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் இதை எதிர்த்து சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்பு வோடபோன் செயலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பின்பு சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோனுக்கு
சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வோடபோன் வரி விவகாரம்.! 2 வாரம் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு.!

குறிப்பாக இந்த உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா, என்று கடந்த மாதம் 7-ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் ராஜிவ் சஹாய் எண்ட்லா, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பின்பு மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, மத்திய அரசின் அதிகார குழு இன்னும் கூடாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே முடிவு எடுக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் வரி விவகாரம்.! 2 வாரம் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு.!

அதேபோல் சமீபத்தில் வந்த தகவலின்படி வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த 2020-ம் ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த 2021 ஆண்டின் துவகத்தில் அதன் கட்டணங்களை 15 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக பயனர்களால் ஏற்படும் இழப்புகளை சரி செய்வது மற்றும் சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சில காரணங்களில் ஏதாவது ஒன்றுதான் வரவிருக்கும் விலை உயர்விற்கான காரணமாக இருக்கலாம்.

வோடபோன் வரி விவகாரம்.! 2 வாரம் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசு.!

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இந்த விலை உயர்வு நடவடிக்கையை ஏர்டெல் நிறுவனமும் பின்பற்றக்கூடும் என்று ET டெலிகாமின் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இருந்தபோதிலும் ஏர்டெல், வி போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப அவற்றின் விகிதங்களை அளவிடுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Govt seeks time in Vodafone Case And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X