ரூ.3000 கோடியை மிச்சப்படுத்திய கேரள அரசு: எதில் தெரியுமா?

அம்மாநிலத்தின் கல்வி கொள்கையே இதற்கு காரணம். இந்த நிலையில் தென்னிந்தியாவின் ஒரு மாநிலமான கேரள அரசு எடுத்துள்ள ஒரு முடிவால் கல்வித்துறையில் ஒரு புதிய புரட்சியே ஏற்பட்டுள்ளது.

|

இந்தியாவின் கேரள மாநிலம அழகுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, இந்தியாவிலேயே முதல்முறையாக 100% கல்வியறிவு கொண்ட மாநிலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் கல்வி கொள்கையே இதற்கு காரணம். இந்த நிலையில் தென்னிந்தியாவின் ஒரு மாநிலமான கேரள அரசு எடுத்துள்ள ஒரு முடிவால் கல்வித்துறையில் ஒரு புதிய புரட்சியே ஏற்பட்டுள்ளது.

ரூ.3000 கோடியை மிச்சப்படுத்திய கேரள அரசு: எதில் தெரியுமா?

கேரளாவில் உள்ள பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் சமீபத்தில் லீனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டு வந்த ஒரு சலுகையை பயன்படுத்தி அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி மற்றும் பொது உபயோகத்திற்காக இலவச லீனக்ஸ் ஓஎஸ்-ஐ பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

லீனக்ஸ்

லீனக்ஸ்

கேரள அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் நடவடிக்கையின்படி லீனக்ஸ் புதிய பதிப்பான உபண்டு ஓஎஸ் பதிப்பை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த அறிவுறுத்தி அனுப்பியுள்ளது. இதன் காரணமாக கிராபிக்ஸ், 3டி அனிமேஷன், மொழிகள் சம்பந்தப்பட்ட டூல்ஸ்கள், வீடியோ எடிட்டிங், கிராபிக்கல் இன்பர்மேஷன் சிஸ்டம், இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர், சவுண்ட் ரிக்கார்டிங், டேட்டாபேஸ் அப்ளிகேஷன், ஓப்பன் சோர்ஸ் ஆபிஸ் மற்றும் பல விஷயங்களை அங்குள்ள மாணவர்கள் பயன்படுத்த உதவியாக உள்ளது.

ரூ.3000 கோடி மிச்சமாகியுள்ளது

ரூ.3000 கோடி மிச்சமாகியுள்ளது

கேரள அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இந்த நடவடிக்கையால் அம்மாநில அரசுக்கு சுமார் ரூ.3000 கோடி மிச்சமாகியுள்ளது. இதுகுறித்து கேரள அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் துணை சேர்மன் அன்வர் சதாத் அவர்கள் பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறுகையில், 'நாங்கள் பெற்றுள்ள இந்த அனைத்து வசதிகளையும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் பெற வேண்டும் என்றால் ரூ.1.5 லட்சம் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் செலவாகும். ஆனால் லீனக்ஸ் கொடுத்த புதிய சலுகையை நாங்கள் பயன்படுத்தியதால் எங்கள் மாநில பள்ளி மாணவர்களுக்கு தேவையான சாப்ட்வேர்கள் குறிப்பாக ஜியோஜிப்ரா, சன்கிளாக், ஜிகிராம்பிரிஸ், ஸ்டெல்லரியம் உள்பட பல வசதிகளை இலவசமாக பெற்றுள்ளோம். இதைவிட பெரிய விஷயம் என்னவெனில் லின்கஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இலவசமாக பெற்றுள்ளோம்

 போட்டோஷாப் பிரிமியர்

போட்டோஷாப் பிரிமியர்

மேலும் இதுகுறித்து சதாத் கூறுகையில், 'மைக்ரோசாப்ட் ஆபீஸ், அடொப் போட்டோஷாப் பிரிமியர், கோரல் டிரா போன்ற முக்கிய சாப்ட்வேர்களுக்கு பதிலாக லீனக்ஸில் லிப்ரா ஆபீஸ் என்ற ஒரு வசதி உள்ளது என்றும், இதற்கான செலவுகள் ஒருசில ஆயிரங்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். FOSS தரும் இந்த சேவையில் காப்பி, ஸ்டடி, சோர்ஸ் கோட்-ஐ ஷேர் செய்வது ஆகிய வசதிகளும் உண்டு. மேலும் ஜியோஜிப்ராவில் உள்ள சோர்ஸ்கோட், மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி கொடுக்க ஆசிரியர்களுக்கும் உதவுகிறது.

மலையளம் யூனிகோடிற்கும் சப்போர்ட் செய்யும்

மலையளம் யூனிகோடிற்கும் சப்போர்ட் செய்யும்

மேலும் இதில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் லீனக்ஸ் ஓஎஸ் சிஸ்டம் மலையளம் யூனிகோடிற்கும் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளதால் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் அனைத்தையும் கற்றுக்கொள்கின்றனர். மேலும் சர்வதேச அளவில் பிரபலமாகவுள்ள மார்பிள், ராஸ்மோல், ஜிபிளேட்ஸ் ஜிமெக்கில ஆகிய சாப்ட்வேர்கள் இலவசமாக இதில் கிடைப்பதால் பெரும் பயன் அடைகின்றனர்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாநிலம் முழுவதிலும் உள்ள 14 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது இரண்டு லட்சம் கம்ப்யூட்டர்களில் இதில் 60 ஆயிரல் லேப்டாப்புகளும் அடங்கும். இதில் 55 ஆயிரம் லேப்டாப் ஹைடெக் லேப் புரொஜக்ட் படிப்பிற்கு உதவுகிறது. கேரள அரசின் இந்த முடிவை லீனக்ஸ் நிறுவனம் வரவேற்றுள்ளது. கேரளாவை போன்றே தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் இந்த இலவச சேவையை பயன்படுத்தி மாணவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Govt Schools In Kerala To Use Linux Based Free OS Saving Rs 3000 Cr : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X