உங்களுக்கே முன்னுரிமை: பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி

|

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம், சமீபத்தில் புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை தனது ஊழியர்களுக்காக அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் படி சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு தேர்வு செய்து, ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்தது.

விருப்ப ஓய்வு திட்டம்

விருப்ப ஓய்வு திட்டம்

ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு புதிய விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கணிப்புப்படி சுமார் 77,000 ஊழியர்கள் இத்திட்டத்தை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 78000 ஊழியர்கள் முன்பதிவு

78000 ஊழியர்கள் முன்பதிவு

பிஎஸ்என்எல் நிறுவனம் கணித்தது போல் இதுவரை சுமார் 78,000 ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்

மாநிலங்களவையில் கேள்வி

மாநிலங்களவையில் கேள்வி

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் சஞ்சய் சம்ராவ் தோட்ரே பதிலளித்து பேசினார்.

புத்துயிரூட்டும் வகையிலான திட்டங்கள்

புத்துயிரூட்டும் வகையிலான திட்டங்கள்

அதில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்த அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனத்துக்கு புத்துயிரூட்டும் வகையிலான திட்டங்களை மத்திய அரசு அளித்து இருக்கிறது.

பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கே முன்னுரிமை

பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கே முன்னுரிமை

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நிதி நிலைமை சரி செய்ததும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் போதுமான நிதியை திரட்டிய பிறகு பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?

ஜனவரி 31 ஆம் தேதிக்குள்

ஜனவரி 31 ஆம் தேதிக்குள்

சுமார் 78,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர், அதேபோல் 13,500 எம்.டி.என்.எல் ஊழியர்களும் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த பட்டியலை அரசு ஜனவரி 31-ம் தேதிக்குள் இறுதி செய்யும் எனவும் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Govt priority to paying salary for bsnl employees- ministers of state

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X