Home
News

"நான் தான் முகேஷ்" தெரியும்ல.. OTT தளங்களுக்கு மத்திய அரசு வைத்த செக்!

இந்தியாவில் அதிகரித்துவரும் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும், ஓடிடி தளங்களுக்கு (OTT Platforms) எதிராக குவிந்துவரும் புகார்களின் அடிப்படையிலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்; உயிரைக் கொல்லும் (Tobacco Causes Cancer; Tobacco Kills) என்ற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விளம்பரங்களை தியேட்டர்களில் வெளியாகும் படங்களிலும், டிவியில் ஒளிபரப்பாகும் படங்களிலும் நாம் பார்த்திருப்போம். அதோடு, புகையிலையால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடியோக்களும் ஒளிப்பரப்பு செய்யப்படும்.

குறிப்பாக "நான் தான் முகேஷ்" என்று ஒளிப்பரப்பு செய்யப்படும் வீடியோவை பார்த்தால், புதிதாக புகைப்பழக்கம் பழகியோருக்கும், புகைப்பிடிக்க ஆசைப்படுவோருக்கும் உயிர் மீது பயமே வந்துவிடும் போல் இருக்கும். பொதுமக்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கை கட்டுப்படுத்த மத்திய அரசு, இந்த விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. சொல்லப்போனால், உலக நாடுகளிலேயே முதல் முறை புகையிலை எதிர்ப்பு வாசகங்கள் நம் நாட்டில் மட்டுமே திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இப்போது, பல்வேறு நாடுகள் அதை பின்பற்றி வருகின்றன. இது வளரும் குழந்தைகளிடையே மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இப்போது நெட்ஃபிளிக்ஸ் (Netflix), டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் பிரைம் வீடியோ ( Amzon Prime Video) போன்ற ஓடிடி தளங்கள் இந்தியாவில் மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளன.

நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ஓடிடி தளங்களை பயன்படுத்தி வருவதால், அவற்றிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துவந்தன. ஆங்காங்கே புகார்களும் எழுந்தன. இந்த கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு, இப்போது ஓடிடி தளங்களிலும் புகையிலை தொடர்பான வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று உத்தவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உத்தரவில், "இந்தியாவில் செயல்படும் அனைத்து ஓடிடி தளங்களிலும், இனிமேல் புகையிலை தொடர்பான விழிப்புணர்வு ஆடியோ, வீடியோ மற்றும் வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த வகையில், ஓடிடியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் (Films), டிவி சீரியல்கள் (Television Serials), சீரிஸ்கள் (series) உள்ளிட்ட அனைத்து வகை புரோகிராம்களின் தொடக்கத்திலும், இடைவேளையிலும் "புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்; உயிரைக் கொல்லும் (Tobacco Causes Cancer; Tobacco Kills) என்ற விழிப்புணர்வு வாசகங்கள் 30 நொடிகளுக்கு ஆடியோ உடன் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.

அதேபோல 20 நொடிகளுக்கு புகையிலை விழிப்புணர்வு கொண்ட ஆடியோ, வீடியோ கிளிப்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த புதிய விதிமுறைகளை ஓடிடி தளங்கள் பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Govt Issues New Anti-Tobacco Rules For OTT Platforms Like Netflix, Disney Hotstar, Prime Video Etc
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X