Home
News

ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆகிடுச்சா.. உடனே இதை நோட் பண்ணுங்க.. இல்லனா சிக்கல் தான்..

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு (aadhaar card) என்பது அத்தியாவசியமான அடையாள அட்டையாகும். அதாவது இந்தியாவில் வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் சிம் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சிம் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதியும் கூட உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளைப் பெற இந்த ஆதார் கார்டு மிகவும் அவசியமாக உள்ளது.

ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆகிடுச்சா.. உடனே இதை நோட் பண்ணுங்க..

இந்நிலையில் ஆதார் கார்டு வைத்திருக்கும் மக்கள் அதைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அரசு கூறியுள்ளது. ஆனாலும் இதைச் செய்ய கட்டாயம் இல்லை என்றாலும், அது பல நன்மைகளைத் தரும். அதாவது ஆதார் கார்டை புதுப்பிக்கவில்லை என்றால் வரும் காலங்களில் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எனவே அனைவரும் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதுவும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதை அப்டேட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள் அதை புதுப்பிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது முன்னதாக இந்த விதி கட்டாயமாக இருந்ததது. அவ்வாறு அப்டேட் செய்யவிட்டால் அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இப்போது அது கட்டாயம் இல்லை. ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்களின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு கூறியபடி ஆதார் அட்டை என்பது அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கோ அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் பிற நிதி நடவடிக்கைகளுக்காகவோ என கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். எனவே உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்தால், உங்கள் ஆவணங்களில் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது உங்கள் முகவரி, மொபைல் நம்பர் அல்லது அல்லது பயோமெட்ரிக் தகவலில் மாற்றம் இருக்கலாம். எனவேதான் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.

ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆகிடுச்சா.. உடனே இதை நோட் பண்ணுங்க..

அதேசமயம் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான விதிகளில் சில தளர்வுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டை புதுப்பிக்காமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது கட்டாயம் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் விரும்பினால், அவர்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம். ஒருவேளை இதில் விருப்பம் இல்லை என்றால் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை உங்களுக்கு ஆதார் புதுப்பிக்க விருப்பம் இருந்தால் அதை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். அதன்படி myAadhaar போர்டல் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்தி ஆதாரை புதுப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் செயல்பாட்டில் ஆர்வமில்லாதவர்கள், அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குச் சென்று தங்களது ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Govt has made it clear that Aadhaar details should be updated every 10 years: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X