ஃபாஸ்ட் டேக் திட்டத்தை அமல்படுத்துவது டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.!

|

டிசம்பர் 1 ஆம் தேதிமுதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஃபாஸ்ட் டேக் இல்லாமல் அந்த வழித்தடத்தில் பயணித்தால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில ஃபாஸ்ட் டேக் திட்டத்தை அமல்படுத்துவது டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்த கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை அடுத்து, டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ரேடியோ ஃப்ரீக்குவென்சி

ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட் டேக் என்பது. சுங்கச்சாவடியில் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும். இந்த ஃபாஸ்ட் டேக் உங்கள் வாங்கி இணையதள வாலெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மொபைல் ரீசார்ஜ் செய்வது போல

மொபைல் ரீசார்ஜ் செய்வது போல உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.

ஆஃபர்கள் மூலம் கிரங்கடிக்கும் பிளிப்கார்ட்: 80% தள்ளுபடி அறிவிப்புஆஃபர்கள் மூலம் கிரங்கடிக்கும் பிளிப்கார்ட்: 80% தள்ளுபடி அறிவிப்பு

நிதின் கட்கரி

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை போல், தேசிய நெடுஞ்சாலையில் ஊழல் அனைத்து லேன்களும் தற்பொழுது ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி டோல் கட்டணங்கள் ஃபாஸ்ட் டேக் முறைப்படி டிஜிட்டல் முறையில் மட்டுமே அனைவரிடமும் வசூலிக்கப்படும்.

ஃபாஸ்ட் டேக்

ஃபாஸ்ட் டேக் இல்லாமல் பணம் மூலம் கட்டணம் செலுத்த ஒரே ஒரு லேன் மட்டும் கேஷ் வாங்கும் டோலாக செயல்படும் என்றும், பணம் மூலம் டோல் கட்டணம் செலுத்துபவர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபாஸ்ட் டேக் கணக்கில் தொகை இல்லாமல் டோல் கேட்டை கடப்பவர்களுக்குக் கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அமேசான் இந்தியா

ஃபாஸ்ட் டேக் கார்ட்டை நேரடியாக சுங்கச்சாவடிகளிலும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். சில வங்கிகள் மூலம் ஃபாஸ்ட் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கரூர் வைசியா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஃபெடரல் பேங்க், சரஸ்வத் பேங்க், சவுத் இந்தியன்
பேங்க், ஐடிஎஃப்சி வங்கி, எக்யூடாஸ் வங்கி, பே டீம் பணம் செலுத்தும் வங்கி, அமேசான் இந்தியா இணையதளம் ஆகியவைகளில் கட்டணம் செலுத்தி ஃபாஸ்ட் டேக் கார்ட் பெறலாம்.

 வாகனத்தில் ஆர்.சி புக்

அமேசான் இந்தியா இணையதளத்திலும் கட்டணம் செலுத்தலாம். இந்த அனைத்து வங்கிகளிலும் பணம் செலுத்துவதற்கு முன்பாக கேஒய்சி படிவம் நிரப்ப வேண்டும். அதன்பின் வாகனத்தில் ஆர்.சி புக், ஓட்டுநரின் இருப்பிட சான்றிதழ், அடையாள சான்றிதழ், ஓட்டுநரின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் ஃபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியன முறையாக சமர்பித்த
பிறகே ஃபாஸ்ட் டேக் கார்ட்டை பெற முடியும்.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெஃப்ட், நெட் பேங்கிங் ஆகிய வசதிகள் மூலம் 100 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துபவர்களுக்கு தனியாக ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்கப்படும் அதன்மூலம் இருப்புத் தொகையை கண்டறிந்துக் கொள்ளலாம். அதேபோல் பதிவிட்ட தொலைபேசி எண்ணுக்கும் பணம் பிடித்தவுடன் இருப்புத் தொகை
காண்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Govt Extends Mandatory FASTag Roll-out Date to December 15 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X