20கி.மீ தொலைவுக்கு போனில் வாட்ஸ்ஆப் பாரத்துக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசு ஓட்டுநர்: பணியிடை நீக்கம்

|

இப்போது வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும், ஆனால் புதிய தொழில்நுட்பங்களை குறிப்பிட்ட இடத்தில் தான் பயன்படுத்த வேண்டும்,தேவையில்லாத
இடத்தில் பயன்படுத்தினால் மற்றவர்களுக்கும் அது தொந்தரவாக இருக்கும்.

 சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற அரசு பேருந்தில் சுமார் 20கிலோ மீட்டருக்கு மேலாக செல்போனை பாரத்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 சமூக வலைதளத்தை பார்க்கத் தொடங்கினார்

சமூக வலைதளத்தை பார்க்கத் தொடங்கினார்

நேற்று (வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது, பேருந்து ஆலங்குடியை கடந்ததும் பேருந்தின் ஓட்டுநர் தனது பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போனை எடுத்து வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளத்தை பார்க்கத் தொடங்கினார்.

மலிவு விலையில் அதிக சலுகையுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை! ரியல்மி X மற்றும் ரியல்மி 3i விற்பனை!மலிவு விலையில் அதிக சலுகையுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை! ரியல்மி X மற்றும் ரியல்மி 3i விற்பனை!

 பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி

பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி

குறிப்பாக ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டும், மறுகையில் செல்போனை பார்த்துக்கொண்டும் பேருந்தை ஓட்டியுள்ளார், இதனால் அச்சத்தோடு பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தனர். பின்பு ஏதோ அவசரத்துக்கு
மெசேஜை பார்க்கிறார் என்று நினைத்தப் பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி.

 தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை

அதிர்ச்சி என்னவென்றால், ஆலங்குடியில் செல்போனில் வாட்ஸ்ஆப் பார்க்கத் தொடங்கிய ஓட்டுநர் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை சுமார் 20கிலோ மீட்டருக்கு மேலாக செலபோனிலேயே அடிக்கடி மூழ்கியபடி பேருந்தை
இயக்கியுள்ளார்.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.!டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.!

 தற்போது வைரலாகி வருகிறது

தற்போது வைரலாகி வருகிறது

இந்த செயலுக்கு சக பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இதை ஓட்டுநரின் அருகே பயணித்த பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

பட்டுக்கோட்டைக் கிளை மேலாளர்

பட்டுக்கோட்டைக் கிளை மேலாளர்

தொடர்நு ஓட்டுநரின் செயல் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் உத்தரவைத் தொடர்ந்து பட்டுக்கோட்டைக் கிளை மேலாளர் விசாரணையில் ஈடுபட்டனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

இந்த விசாரணையில் செல்போன் பாரத்துக்கொண்டு பேருந்தை இயக்கிய அந்த ஓட்டுநரின் பெயர் மூக்கையா என்றும்,
அவர் ஆலங்குடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Best Mobiles in India

English summary
govt-bus-driver-suspended-for-chatting-in-cellphone-while-driving : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X