எங்க வந்து யாரு சீன் போடுறது? ஆன்டி-இந்தியன் வேலையை பார்த்த பாகிஸ்தான்.. செஞ்சி விட்ட இந்திய அரசு!

|

"ஓநாய் ஊருக்குள் வருவதே தவறு.. இதில் ஊளையிட்டு கொண்டு வருகிறதா?" என்று கேட்கும்படியான ஒரு காரியம் இந்தியாவில் நடந்துள்ளது.

அதென்ன காரியம்? அதில் பாகிஸ்தானின் (Pakistan) பெயரும், ஆன்டி-இந்தியன் (Anti-Indian) என்கிற வார்த்தையும் அடிபடுவதற்கு என்ன காரணம்? இதோ விவரங்கள்:

ஆன்டி-இந்தியன் வேலை!

ஆன்டி-இந்தியன் வேலை!

பாகிஸ்தானை தளமாக கொண்ட ஒரு ஓடிடி வலைதளம் ஆனது ஆத்திரமூட்டும் படியான ஒரு "கேவலமான" ஆன்டி-இந்தியன் வேலையை பார்த்துள்ளது.

அதனை தொடர்ந்து அந்த ஓடிடி (OTT) தளத்தின் வலைத்தளம், இரண்டு மொபைல் ஆப்கள், நான்கு சோஷியல் மீடியா அக்கவுண்ட்கள் மற்றும் ஒரு ஸ்மார்ட் டிவி ஆப் ஆகியவற்றை தடை செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

ஒரே ஒரு வெப் சீரிஸ்.. மொத்தமாக இழுத்து மூடியாச்சு!

ஒரே ஒரு வெப் சீரிஸ்.. மொத்தமாக இழுத்து மூடியாச்சு!

விட்லி டிவி (Vidly TV) என்று அழைக்கப்படும் அந்த ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வெப் சீரீஸ் ஆனது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கும்படி உள்ளதாக இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பாகிஸ்தானை மையமாக கொண்ட Vidly TV தளமானது சேவக்: தி கன்ஃபெஷன்ஸ் (Sevak: The Confessions) என்கிற தலைப்பில் வெப் சீரீஸ் ஒன்றை வெளியிட்டது.அந்த வெப் சீரீஸ் தான் இவ்வளவு பிரச்சனைக்குமான மூல காரணம் ஆகும்!

இந்தியாவிற்கு எதிரான கதையை சித்தரிக்கிறது!

இந்தியாவிற்கு எதிரான கதையை சித்தரிக்கிறது!

இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting) கூற்றுப்படி, சேவக்: தி கன்ஃபெஷன்ஸ் என்கிற வெப் சீரீஸ் ஆனது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வெப் சீரிஸ் ஆகும்.

ஏனென்றால் அந்த வெப் சீரிஸ் ஆனது ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation Blue Star) மற்றும் அதன் பின்விளைவுகள், அயோத்தியில் பாபர் மசூதி (Babri Masjid) இடிப்பு, கிரஹாம் ஸ்டெயின்ஸ் (Graham Staines) என்கிற கிறிஸ்தவ மிஷனரியின் கொலை, மாலேகான் (Malegaon) குண்டுவெடிப்பு, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் (Samjhauta Express) குண்டுவெடிப்பு போன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் இந்தியாவிற்கு எதிரான கதையை சித்தரிக்கிறது.

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

நதி நீர் தகராறையும் கூட விட்டு வைக்கவில்லை!

நதி நீர் தகராறையும் கூட விட்டு வைக்கவில்லை!

சேவக்: தி கன்ஃபெஷன்ஸ் என்கிற வெப் சீரீஸ் ஆனது மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை மட்டுமின்றி சட்லஜ் யமுனை இணைப்பு கால்வாய் (Sutlej Yamuna Link Canal) தொடர்பான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறையும் கூட விட்டு வைக்கவில்லை; அது தொடர்பான கட்டுக்கதைகளை சித்தரித்துள்ளது.

தற்போது வரையிலாக, இந்த வெப் சீரிஸின் கீழ் மூன்று எபிசோடுகள் (Episodes) வெளியிடப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றை விடவும் மோசமான ஒரு விஷயம் உள்ளது!

எல்லாவற்றை விடவும் மோசமான ஒரு விஷயம் உள்ளது!

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் ஆன கஞ்சன் குப்தா, ட்வீட்டர் வழியாக பகிர்ந்த ஒரு தகவலின்படி, சேவக்: தி கன்ஃபெஷன்ஸ் என்கிற வெப் சீரீஸ் ஆனது பாகிஸ்தானின் இன்போ ஆப்ஸ் அப்பாரட்டஸால் (Information Operations Apparatus) ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளது.

இப்படியான பல காரணங்களை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட விட்லி டிவி என்கிற ஓடிடி தளமானது ஆத்திரமூட்டும் மற்றும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஆன்டி-இந்தியன் வேலைகளை செய்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு, இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

Photo Courtesy: Wikipedia

Best Mobiles in India

English summary
Govt Blocked Pakistan OTT Platform Vidly TV Because Sevak The Confessions Web Series is Anti Indian

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X