ஒவ்வொரு பகுதிக்கும் இணைய சேவை: 7287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டம்- மத்திய அரசு அனுமதி!

|

7000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மொபைல் டவர் இணைப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை செய்தியாளர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். அதில் 44 மாவட்டங்களில் உள்ள 7000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மொபைல் டவர் இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

7000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மொபைல் டவர்

7000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மொபைல் டவர்

ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் உள்ள 44 மாவட்டங்களில் 7000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மொபைல் டவர் இணைப்பு வழங்கப்படும் என தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 4ஜி மொபைல் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த திட்டத்துக்கு ரூ.6466 கோடி மதிப்பில் செலவிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாட்டின் தொலைதூர பகுதிகளில் ரூ.33822 கோடி செலவில் 32152 கிமீ சாலைகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் இதன்மூலம் பயனடையும் எனவும் அடர்ந்த காடுகள், மலைகள் மற்றும் ஆறுகள் வழியாக சாலைகள் அமைக்கப்படும் எனவும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

செல்போன் சேவை இல்லாத பகுதிகளில் மொபைல் டவர்

செல்போன் சேவை இல்லாத பகுதிகளில் மொபைல் டவர்

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் செல்போன் சேவை இல்லாத பகுதிகளில் மொபைல் டவர் அமைத்து சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 7287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவை வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு இந்த சேவை ஐந்தாண்டுகளுக்கான செயல்பாட்டு செலவையும் சேர்த்து ரூ.6466 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் தொலைதூர சேவை

5 மாநிலங்களில் தொலைதூர சேவை

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் தொலைதூர சேவை கிடைக்கப்பெறாத பகுதிகளில் சிக்கலான கிராமங்களில் செல்போன் சேவை வழங்க இந்த புதிய திட்டம் உதவும் என கூறப்படுகிறது. இந்த சேவை மற்றும் திட்டத்தின் மூலம் அந்த பகுதிகளில் புதிய தொழில்நிறுவனங்களை தொடங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கும் எனவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

5ஜி தொழில்நுட்பம் இந்திய அறிமுகம்

5ஜி தொழில்நுட்பம் இந்திய அறிமுகம்

5ஜி தொழில்நுட்பம் இந்திய அறிமுகம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் 4 ஜி இணைய வேகம் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டது.

5ஜி எப்போது அறிமுகமாகும்

5ஜி எப்போது அறிமுகமாகும்

அடுத்த தலைமுறையாக இருக்கும் 5ஜி எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இந்த நிலைியல் 5ஜி சோதித்து பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சோதனையானது 6 மாதங்கள் நடைபெறும் எனவும் இது நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமம், நடுத்தர நகரம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலமாக அனைத்து பகுதிகளிலும் தடையின்றி 5ஜி சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.

சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம்

சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம்

5ஜி சோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும், பரிசோதனையில் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சோதனைகளுக்கு சீன நிறுவனங்களின் சாதனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் மொபைல் பயன்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தது, தற்போது சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம் என தெரிவிக்கப்பட்டு விட்டன.

Best Mobiles in India

English summary
Govt Approves to Provide 4G Mobile Towers Connectivity to 7287 Villages

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X