Home
News

ஆதார்-மொபைல் கட்டாய இணைப்பு: உச்ச நீதிமன்றத்திடம் பணிந்தது மத்திய அரசு.!

மொபைல் போன் மற்றும் சமையல் எரிவாயு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் நல திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

By Prakash S

ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்துடன் செல்போன் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் முடிவு குறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார்-மொபைல் இணைப்பு: உச்ச நீதிமன்றத்திடம் பணிந்தது மத்திய அரசு.!

மேலும் உச்ச நீதிமன்றம் முன்பு ஆதார் மற்றும் மொபைல் போன் எண்களை இணைக்க உத்தரவிட்டுள்ளது என்று கூறியதன் மூலம் மத்திய அரசாங்கம் செய்திகளை நியாயப்படுத்தியது. எனினும் ஆதார் மற்றும் மொபைல் போன் எண்கள் இணைக்கத் தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் :

ஆதார் :

மொபைல் போன் மற்றும் சமையல் எரிவாயு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் நல திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.

மத்திய அரசு:

மத்திய அரசு:

மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர்,நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் கண்டிப்பாக தேவைப்படுகிறது. குறிப்பாக மொபைல் போன் நம்பர் உடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது, ஆனால் இனிமேல் அந்த பிரச்சணை இல்லை, போன் நம்பர் உடன் ஆதார் இணைக்க தேவையில்லை உச்ச நீதிமன்றம் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்நிதி :

லோக்நிதி :

லோக்நிதி அறக்கட்டளை சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல மனு மீது நாங்கள் பிறப்பத்த உத்தரவில், தேச பாதுகாப்பு கருதி, மொபைல் போன் எண்களை பயன்படுத்துவோரின் அடையாளம் மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும் என்றுதான் தெரிவித்திருந்தோம். ஆனால் ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.

Best Mobiles in India

English summary
Govt accepts Supreme Court never made Aadhaar-mobile linkage compulsory; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X