Home
News

ரூ.1499 விலையில் பார்ட்டி பண்ணலாம்.. LED லைட்டிங்குடன் பெஸ்ட் சவுண்ட்பார்.. யோசிக்கவே வேண்டாம் வாங்கிடுங்க..

ஆடியோ தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் நிறுவனமாக கோவோ (GOVO) திகழ்கிறது. இது இப்போது புதிய சாதனமாக கோவோ கோ-சரவுண்ட் 300 சவுண்ட்பார் (GOVO GoSurround 300 Soundbar) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது எல்இடி லைட்டிங்குடன் (LED) வருகிறது.

உங்கள் கேட்ஜெட் லிஸ்டில் புதிதாக ஒரு ஸ்பீக்கர் சாதனத்தை வாங்க ஆசைப்பட்டால், வழக்கமான ப்ளூடூத் ஸ்பீக்கர் சந்தானத்திற்கு பதிலாக அட்டகாசமான டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டு பேக் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய சவுண்ட்பார் சாதனத்தை வாங்க திட்டமிடுங்கள். இந்த ஆடியோ சாதனம் மியூசிக், மூவீஸ் மற்றும் கேமிங்கின் அனுபவத்தை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது.

ரூ.1499 விலையில் பார்ட்டி பண்ணலாம்.. LED லைட்டிங்குடன் பெஸ்ட் சவுண்ட்

இந்த மினி சவுண்ட்பார் ஒரு அசாதாரண ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் படியான ஆடியோ தரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நுகர்வோர் ஸ்பீக்கர் சந்தை 2027 ஆம் ஆண்டுக்குள் 9.39% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வீட்டு ஆடியோ தயாரிப்புகளுக்கான தேவை மற்றும் சவுண்ட்பார்களுக்கான தேவை இந்திய சந்தையில் வலுவாக உள்ளது. கோவோ கோ-சரவுண்ட் 300 (GOVO GoSurround 300) சவுண்ட்பார் அதன் ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் தனித்து நிற்கிறது. அதன் பிரீமியம் ஒலி தரம், சிறந்த வடிவமைப்பு, விதிவிலக்கான பாஸ் செயல்திறன் மற்றும் போட்டி விலை நிர்ணயம் ஆகியவை நுகர்வோருக்கு சரியான தேர்வாக அமைகிறது.

40 மிமீ பிளாஸ்டிங் டிரைவர்களை இது கொண்டுள்ளது. இது 24W கொண்ட உச்ச வெளியீட்டைப் பெருமைப்படுத்துகிறது, இது கேட்போரை உண்மையிலேயே கவர்ந்திழுக்கும் சக்திவாய்ந்த மற்றும் அதிவேக ஆடியோ அனுபவங்களை வழங்குகிறது. கோவோ கோ-சரவுண்ட் 300 சவுண்ட்பாரின் முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

இது அதிவேக 3D சரவுண்ட் சவுண்ட் அம்சத்துடன் கோவோ கோ-சரவுண்ட் 300 போர்ட்டபிள் ஸ்பீக்கர் சாதனம் வருகிறது. இது 52mm டிரைவர்களால் இயக்கப்படுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த 24-வாட் வெளியீட்டை வழங்குகிறது. இது கேமிங், மூவீஸ் மற்றும் தினசரி இசையைக் கேட்பதற்கு ஏற்ற வகையில், வீட்டிலேயே சினிமா ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

ரூ.1499 விலையில் பார்ட்டி பண்ணலாம்.. LED லைட்டிங்குடன் பெஸ்ட் சவுண்ட்

டைனமிக் எல்இடி லைட்டிங் உடன் வருகிறது. எந்தச் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகின்றன. நீங்கள் சிறிது நேரம் தனியாக இருந்தாலும் அல்லது நண்பர்களுடன் ஹேங்கவுட்டை நடத்தினாலும் நீண்ட கால பேட்டரி பயன்பாட்டை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த கோவோ கோ-சரவுண்ட் 300 சவுண்ட்பார் அதை தீர்த்து வைக்கும். மீண்டும் ரீசார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்படாமல், உங்களுக்குப் பிடித்த இசை, திரைப்படங்கள் அல்லது கேம்களை நீண்ட நேரம் அனுபவிக்கலாம்.

8 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது AUX, USB, TF கார்டு உள்ளீடுகள் மற்றும் FM ஆகியவற்றுடன் தடையற்ற இணைப்பை எளிதாக்குகிறது. புளூடூத் V5.3 இணைப்பு அம்சத்துடன் வருகிறது. முன்னெப்போதையும் விட இந்த சவுண்ட்பார் மிகவும் சத்தமாகவும் தெளிவாகவும் இயங்குகிறது. இதன் விலை ரூ. 5,499 ஆகும்.

இவை பிரத்தியேகமாக அமேசான் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.1,499 என்ற விலையில் இப்போது வாங்க கிடைக்கிறது. இந்த தயாரிப்பு ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது மற்றும் பிளாட்டினம் பிளாக் நிறத்தில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
GOVO GoSurround 300 Soundbar With LED Lighting Launched In India at Rs 1499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X