ஆளுக்கு ரெண்டு வாங்கி போடுவீங்க! ரூ.999 பட்ஜெட்டில் கம்பெனி சவுண்ட்பார் வந்தா யாரு விடுவா?
வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் உங்களது மியூசிக்கல் அனுபவத்தை அடுத்த லெவலுக்கு கொண்டும் செல்லும் வகையில், கோவோ (Govo) நிறுவனத்தின் கோசரவுண்ட் 200 சவுண்ட்பார் (GoSurround 200 Soundbar) விற்பனைக்கு வந்துள்ளது. இதுவொரு அறிமுக சலுகை மட்டுமே. இதுகுறித்த முழு விவரம் இதோ.
நம்மில் பலருக்கு எப்போதும், ஹோம் தியேட்டர் அனுபவத்திலேயே படங்கள் பார்த்திலும், பாடல்கள் கேட்பதிலும் விருப்பம் இருக்கும். இதனாலேயே, வூப்பர்கள், ஸ்பீக்கர்கள் என்று உள்ளூரிலேயே கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். ஆனால், அவை அவ்வளவு சிறப்பான அனுபவத்தை கொடுத்திருக்காது. இதனால், பட்ஜெட் விலையில் கம்பெனி சவுண்ட்பார்களை வாங்க சிலர் திட்டமிட்டிருப்பார்கள்.

இவர்களுக்காகவே மலிவான விலையில், 16W ஆடியோ அவுட்புட், 52 மிமீ டிரைவர்கள், ஆர்ஜிபி எல்இடி லைட்ஸ், ஃபாஸ்ட் சார்ஜிங், 14 மணி நேரம் பேக்கப், என்று கோவோ நிறுவனத்தின் கோசரவுண்ட் 200 சவுண்ட்பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மற்ற அம்சங்களும் பின்னிப் பெடல் எடுக்கிறது.
கோசரவுண்ட் 200 சவுண்ட்பார் அம்சங்கள் (GoSurround 200 Soundbar Specifications): இரண்டு 52 மிமீ டிரைவர்களை இந்த சவுண்ட்பார் கொண்டுள்ளது. 16W ஆடியோ அவுட்புட் வருகிறது. கேமிங் (Gaming), மூவிஸ் (Movies), சாங்ஸ் (Songs) குவாலிட்டியை பிரத்யேகமாக பிரித்து காட்டும் வகையில் இந்த சவுண்ட்பார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சவுண்ட்பாரில் பார்ட்டி அனுபவத்தை கொடுக்கும் வகையில் 2 எல்இடி (ஆர்ஜிபி கலர்ஸ்) லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 2000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொடர்ந்து 14 மணி நேரம் பேக்கப் கொடுக்கும். இதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சவுண்ட்பாரில் மல்டிபிள் கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஏயுஎக்ஸ் (Aux) கேபிள், யுஎஸ்பி (USB), டிஎஃப் கார்டு (TF Card), எஃப்எம் ரேடியோ, ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகின்றன. குவாலிட்டியான சவுண்டிங் அனுபவத்துக்காக V5.3 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த சவுண்ட்பார் 375மிமீ நீளம், 66 மிமீ அகலம், 65 மிமீ உயரம் கொண்டுள்ளது. இந்த சவுண்ட்பாருக்கு ஒரு வருட வாரண்ட்டி வருகிறது. இதன் விலை ரூ. 3,999 ஆக நிரண்யிக்கப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையாக ரூ.999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் கோவோ (Govo) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். மிகவும் மலிவான விலைக்கு தரமான சவுண்ட்பார் வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸாக இருக்கும். இந்த சவுண்ட்பார் பிளாட்டினம் பிளாக் (Platinum Black) கலரில் விற்பனைக்கு வருகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








