Home
News

பொது இடங்களில் சார்ஜ்ஜிங்.. இந்திய அரசு எச்சரிக்கை.. Mobile மற்றும் Smartphone பயனர்களே கொஞ்சம் கவனியுங்க..

ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் மொபைல் (Mobile) சாதனங்களை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ஆபத்தும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் மக்களுக்கு இந்திய அரசு புது எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள், வெளியூர் அல்லது ஏதேனும் பயணம் செல்லும் போது, அவர்களுடைய ஸ்மார்ட்போன்களை பொது இடங்களில் இருக்கும் பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்களில் (Public Charging Station) சார்ஜ் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு (Smartphone Users) இருக்கும் மிகப்பெரிய போராட்டம் என்னவென்றால், பேட்டரி சார்ஜ்ஜை சரியாகப் பயன்படுத்துவது தான்.

பொது இடங்களில் சார்ஜ்ஜிங்.. இந்திய அரசு எச்சரிக்கை..

பொது இடங்களில் சார்ஜ் செய்ய வேண்டாம்:

ஸ்மார்ட்போன் பயனர்கள் இப்போது அடிக்கடி சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட்களை (Plug Point) தேட வேண்டியதுள்ளது. பயணத்தின் போது, எப்படியும் ஒரு பொது சார்ஜிங் ஸ்டேஷனை கண்டறிந்து நம்முடைய டிவைஸை சார்ஜ் செய்கிறோம். அவசரக் காலங்களில் இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் நமக்கு உதவுகின்றன என்றாலும் கூட, சில சமயங்களில் இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் பொதுமக்களுக்கு ஆபத்துகளும் நிகழ்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த வசதிகளை இப்போது ஹேக்கர்கள் (Hackers), அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டுள்ளனர். ஆம், பொது இடங்களில் சார்ஜ் செய்யும் போது, உங்கள் போன்களை ஹேக் (Hack) செய்யப் பார்க்கிறார்கள். பொது சார்ஜிங் ஸ்டேஷன் பாயிண்ட்களில், USB டைப் போர்ட் (USB Charging Port) உடன் மொபைல் போன் சார்ஜிங் செய்ய அனுமதிக்கிறது என்றால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.

USB போர்ட் மூலம் பொது இடங்களில் நீங்கள் சார்ஜ் செய்யும் போது, ஹேக்கர்கள் பெரும்பாலும் மால்வேர் (Malware) அல்லது வைரஸ் (Virus) போன்ற தீம்பொருளை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்கிறார்கள். USB போர்ட் மூலம் இணைக்கப்பட்ட டிவைஸை முழுமையாக அணுகி, அதில் உள்ள உங்கள் தரவுகளைத் திருடிவிடுகிறார்கள் (Data Theft). உங்கள் போன் சார்ஜ் ஆவதாக நீங்கள் நினைக்கும் போது, ​​இந்த ஹேக்கர்கள் உங்கள் மொபைல் தகவல்களை திருடுகிறார்கள்.

பொது இடங்களில் சார்ஜ்ஜிங்.. இந்திய அரசு எச்சரிக்கை..

உஷார் மக்களே: சார்ஜ் போடும் பொழுது கவனம் தேவை:

சார்ஜிங் மூலம் இப்படி பொதுமக்களின் போன்களை ஹேக் செய்யும் இந்த செயல்முறையை ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking) என்று அழைக்கப்படுகிறது. பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களில் மூன்று புள்ளிகள் கொண்ட பிளக் பாயிண்டிற்கு (3-Point Plug) பதிலாக டைரக்ட் USB சார்ஜிங் போர்ட்களை (Direct USB Charging Port) நீங்கள் கண்டால், எச்சரிக்கையாக இருங்கள்.

இப்படியான டைரக்ட் USB சார்ஜிங் போர்ட்கள் மூலம் தான் ஹேக்கர்களால் உங்கள் போன் வேறு சாதனத்துடன் இணைக்கப்பட்டு, அதிலிருக்கும் தரவுகள் திருடப்படுகிறது. அத்துடன், உங்கள் போனில் மால்வேர், ஸ்பைவேர், வைரஸ் போன்றவற்றையும் அவர்கள் இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கிறது. உங்கள் போன் லேட்டஸ்ட் அல்லது சமீபத்திய மாடல் என்றால், கட்டாயமாக உங்கள் போனில் டேட்டா எக்ஸ்சேஞ் அம்சம் இயல்புநிலையாக முடக்கப்பட்டிருக்கும் (data transfer is disabled by default).

ஆனால், பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களில் இத்தகைய அம்சம் இல்லை என்பதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பொதுமக்கள் சார்ஜ் செய்ய முயலும் பொழுது 3 பாயிண்ட் சார்ஜ் பின்களை மட்டும் பயன்படுத்தவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Government warns about public mobile charging ports in airport and railway station
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X