அரசு எச்சரிக்கை: SBI பயனர்களே உஷார்- உடனே இதை டெலிட் செய்யுங்கள்., தொடவே வேண்டாம்!

|

எஸ்பிஐ பயனர்கள் இந்த மெஜேசை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இல்லையேல் பணத்தை இழக்க நேரிடும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்பிஐ பயனர்கள் தங்கள் கணக்கு முடக்கப்பட்டதாக பரவும் மெசேஜ்களில் கவனமாக இருக்கும்படி PIB அறிவுறுத்தியுள்ளது. மோசடி செய்பவர்கள்., இதுபோன்ற எச்சரிக்கைகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்புவதாக கூறப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பயனர்கள் இந்த புதிய மோசடியில் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரித்து இருக்கிறது.

எஸ்பிஐ பயனர்களே உஷார்

எஸ்பிஐ பயனர்களே உஷார்

எஸ்பிஐ பயனர்கள் தங்கள் கணக்கு முடக்கப்பட்டதாக வரும் எஸ்எம்எஸ்-கள் மீது கவனமாக இருக்கும்படி பிஐபி எச்சரித்து இருக்கிறது. எஸ்பிஐ பயனர்களை எச்சரிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மோசடி செய்பவர்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை திருடப் பயன்படுத்தும் புதிய மோசடி குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அரசு கொள்கைகள், திட்டங்கள், முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்த தகவலை தெரிவிக்கும் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) எஸ்பிஐ பயனர்களை இந்த புதிய மோசடி குறித்து எச்சரித்து இருக்கிறது.

மெசேஜ்களில் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை

மெசேஜ்களில் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை

எஸ்பிஐ பயனர்கள் தங்கள் கணக்கு தடுக்கப்பட்டதாக வரும் மெசேஜ்களில் கவனமாக இருக்கும் எச்சரிக்கும்படி தெரிவித்துள்ளது. மோசடி செய்பவர்கள் இதுபோன்ற மெசேஜ்களை அனுப்புவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மெசேஜ்கள் அல்லது அழைப்புகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்க வேண்டாம் என எஸ்பிஐ பயனர்களை நிறுவனம் எச்சரித்து இருக்கிறது. இந்த மெசேஜ்களில் வரும் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்க நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பயனர்களை எச்சரித்திருக்கிறது. அந்த டுவிட்டில் பிஐபி குறிப்பிட்டுள்ளபடி, "உங்கள் @TheOfficialSBI கணக்கு தடுக்கப்பட்டுள்ளது" என்ற ஒரு தகவல் பரவி வருகிறது.

எஸ்பிஐ பயனர்களுக்கு பிஐபி தெரிவித்த தகவல்

எஸ்பிஐ பயனர்களுக்கு பிஐபி தெரிவித்த தகவல்

பிபிஐ பயனர்களுக்கு தெரிவித்த தகவலை பார்க்கலாம்.,

  • பகிரப்படும் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ்களில் அவர்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ளும்படி கேட்கும்.
  • ஒருவர் இத்தகைய செய்தியை பெறும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக report.phishing@sbi.co.in-க்கு புகாரளிக்க வேண்டும். இதுகுறித்து வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
  • போலியான மெசேஜ்கள்

    போலியான மெசேஜ்கள்

    மோசடி செய்பவர்கள் எஸ்பிஐ வங்கியில் இருந்து அனுப்புவது போல் போலியான மெசேஜ்களை அனுப்புகிறார்கள். அதில் கணக்கு முடக்கப்பட்டதால் தங்கள் தனிப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி பயனர்களை கேட்கிறது என பிபிஐ விளக்கமளித்துள்ளது. மெசேஜ் மூலம் மோசடி செய்பவர்கள் பயனர்கள் தங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்த செய்தியுடன் அனுப்பப்பட்ட இணைப்பை கிளிக் செய்து கேட்கப்படும் தகவலை சமர்பிக்கும்படி கேட்கிறார்கள்.

    அனுப்பப்படும் மெசேஜ்

    அனுப்பப்படும் மெசேஜ்

    "Dear A/c holder SBI BANK documents has expired A/c will be blocked Now Click http://sbikvs.II Update by NetBanking." அதாவது அன்புள்ள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி ஆவணங்கள் காலாவதியாகிவிட்டன. அக்கவுண்ட் தடுக்கப்படுவதை தடுக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என http://sbikvs.II Update by NetBanking இதை பகிருகிறது.

    மெசேஜ்களை உற்று நோக்குவது அவசியம்

    மெசேஜ்களை உற்று நோக்குவது அவசியம்

    நீங்கள் இந்த தகவலை உற்று நோக்கினால் இது எஸ்பிஐ-ல் இருந்து அனுப்பப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடியும். இலக்கணப் பிழைகள், வடிவமைப்புச் சிக்கல்கள், நிறுத்தக் குறி சிக்கல்கள் மற்றும் இணைப்பு கூட அதிகாரப்பூர்வ எஸ்பிஐ இணையதளத்தில் இல்லை. இந்த வங்கிகள் உத்தியோகப்பூர்வ வங்கி தொடரில் இருந்தே எஸ்எம்எஸ் அனுப்பும். இந்த மோசடி செய்திகளில் பெரும்பாலும் இலக்கணப் பிழைகள் இருக்கும். எந்த தகவலையும் சற்று உற்றுநோக்குவது அவசியம். எஸ்பிஐ பயனர்கள் போலி மெசேஜ்கள் மூலம் தீங்கிழைக்கும் இணைப்புகள் மூலம் மோசடி செய்வது இது முதல்முறை அல்ல. இந்த இணைப்பை கிளிக் செய்து KYC சமர்பிக்கும்படி தொடர்ச்சியாக பல்வேறு முறையில் கேட்டு வருகிறார்கள்.

Best Mobiles in India

English summary
Government Warning SBI Users to Beware of a New Scam: Delete this immediately

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X