மக்களே உஷார்: கோவிட்-19 தடுப்பூசிகள் விற்கும் போலி வலைதளம்- அரசு எச்சரிக்கை!

|

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு எதிராக போலியாக இயங்கும் வலைதளம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Mohfw.xyz என்ற போலி வலைதளம் கோவிட்-19 தடுப்பூசியை ரூ.4000 முதல் ரூ.6000 வரை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இது போலி வலைதளம் என பிஐபி பேக்ட்செக் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்: கோவிட்-19 தடுப்பூசிகள் விற்கும் போலி வலைதளம்!

கொரோனா தொற்று உலகநாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என கூறலாம். 26 நாட்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தி உலகின் வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இதே அளவிலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்த அமெரிக்காவிற்கு 27 நாட்களும், இங்கிலாந்துக்கு 48 நாட்களும் எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி, இதுவரை 70 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 24 மணிநேரத்தில் நான்கு லட்சத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப்பணியாளர்களில் 79 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் பீகார் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் குறிப்பிட்ட பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 40 சதவீதத்திற்கு குறைவானோரே தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Government Warning About Fake Websites Offers Covid-19 Vaccine

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X