Home
News

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.. மொபைலில் தெரியாமல் கூட இதை தொடாதீங்க.. ஏன்?

எஸ்பிஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கி தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. எனவே தான் இந்த வங்கியில் அதிக மக்கள் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது இந்த எஸ்பிஐ (SBI) வங்கியில் கணக்கு வைத்துள்ள மக்கள் மோசடி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மோசடி அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர், அவர்களின் கணக்குகளில் இருந்து போலி செய்திகள் மூலம் பணம் திருடப்படுகிறது. தற்போது இது தொடர்பாகத் தான் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.. மொபைலில் தெரியாம கூட இதை தொடாதீங்க.

அதாவது கடந்த சில நாட்களாக ரிவார்டு பாயின்ட் (Reward points) என்ற பெயரில் எஸ்பிஐ கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மின்னஞ்சல்கள் மற்றும் SMS மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் ஒரு மோசடி செய்தி மூலம் வெகுமதி புள்ளிகளை (ரிவார்டு பாயின்ட்) வழங்குவதாகக் கூறி மோசடி செய்கின்றனர்.

தற்போது இந்த மோசடியில் வாடிக்கையாளர்கள் நிறையப் பேர் சிக்கியுள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இதில் எஸ்பிஐ நெட்பேங்கிங் ரிவார்டு பாயின்டின் மதிப்பு ரூ.9980 என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரிவார்டு பாயின்டை ரிடீம் செய்ய ஒரு குறிப்பிட்ட APK ஃபைலை பதிவிறக்கம் செய்யுமாறு அந்த செய்தியில் கேட்கப்பட்டுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.. மொபைலில் தெரியாம கூட இதை தொடாதீங்க.

அதுவும் APK ஃபைலை பதிவிறக்கம் செய்யுமாறு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த செய்திகள் முற்றிலும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக PIB உண்மைச் சரிபார்ப்பு சோதனையில் இந்தச் செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் இதுபோன்ற எந்த இணைப்பையும் அனுப்புவதில்லை என்று கூறியுள்ளது.

அதேபோல் போலியான APK ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எஸ்பிஐ வங்கியும் மத்திய அரசும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக வெகுமதிகள் போன்ற சலுகைகள் குறித்த செய்திகள் வந்தால் வங்கி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று ஸ்டேட் பேக் ஆப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இதுபோன்ற பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா இது போன்ற எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. சரி இப்போது மொபைலில் எஸ்பிஐ வங்கி கணக்கு பேலன்சை எப்படித் தெரிந்துகொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

அதாவது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 09223766666 என்ற எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவை எண்ணிற்கு கேப்பிட்டல் எழுத்தில்BAL என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பவும், அடுத்த சில வினாடிகளில் உங்கள் வங்க கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.. மொபைலில் தெரியாம கூட இதை தொடாதீங்க.

அதேபோல் உங்களது ஸ்மார்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலி இருக்கிறது என்றால் +919022690226 என்ற எண்ணை முதலில் உங்களில் போனில் சேவ் செய்ய வேண்டும். அதன்பிறகு வாட்ஸ்அப் ஓபன் செய்து நீங்கள் சேவ் செய்த எண்ணிற்கு Hi என்று டைப் செய்து அனுப்பினால், பல ஆன்லைன் சேவைகள் காண்பிக்கப்படும். இதில் 'Get Balance' என்ற விற்பதை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கின் பேலன்சை தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் எஸ்பிஐ யோனா ஆப்ஸ் (SBI YONO Apps), எஸ்பிஐ யோனோ லைட் ஆப்ஸ் (SBI Yono Lite app), எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங் (SBI Internet Banking) டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ் (Digital Payment Apps) போன்றவற்றை பயன்படுத்திக் கூட உங்களது எஸ்பிஐ கணக்கு பேலன்சை தெரிந்துகொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
government warned SBI customers about receiving fake SMS in the name of reward points: Details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X