ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது : ஐடி அமைச்சர் சொல்கிறார்.!
ஆதாரை சிறந்த நிர்வாகம் மற்றும் தகவல் விநியோகம் செய்யும் அமைப்பாக உலக வங்கியும் ஐ.எம்.எப் அங்கீகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம் பொதுமக்களும் தங்களின் ஆதார் தகவல்களை சமூகவலைதளங்களில் தரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

தகவல் பாதுகாப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட நீதிபதி பி என் ஶ்ரீகிருஷ்ணா தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக அமைச்சர் கூறினார். தற்போது ஆதார் பாராளுமன்றத்தில் சரியான சட்டம் இயற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அச்சட்டத்தின் மூலம் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளும், தனியுரிமை பாதுகாப்பும் வழங்கப்படுவது உறுதிபடுத்தப்படுகிறது.ஆதார் தகவல்களுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படாதவாறு உதாய்(UIDAI)ஆணையம் தொடர்ந்து பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

நீதிபதி பிஎன் ஶ்ரீகிருஷ்ணா
ஆதாரை சிறந்த நிர்வாகம் மற்றும் தகவல் விநியோகம் செய்யும் அமைப்பாக உலக வங்கியும் ஐ.எம்.எப் அங்கீகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.நீதிபதி பிஎன் ஶ்ரீகிருஷ்ணா தலைமையிலான தகவல் பாதுகாப்புக்கான வல்லநர் குழு, தகவல் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வெள்ளை அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி, தற்போது இந்தியாவில் தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு பற்றிய அறிக்கையை இறுதி செய்யும் பணியில் உள்ளது.

இந்தியா
"தற்போது இந்தியா டிஜிட்டல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. தனியுரிமை சுதந்திரத்தை நாம் முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் போது, தீவிரவாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தனியுரிமையை சாக்கு சொல்ல முடியாது.இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தனியுரிமை ஆணையை நாம் மதிக்கும் போது, இந்தியா டிஜிட்டல் துறையில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.
இந்திய அரசு தகவல்களை தவறாக பயன்படுத்திய பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அவர்கள் மன்னிப்பு கோரியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தினமும் 3.5கோடி ஆதார்
நுகர்வோர்கள் தங்களின் தகவல்களை சமூக வலைதளங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சரியான நிர்வாகத்தை தரவும், ஏழைகளுக்கான பலன்கள் நேரிடையாக மற்றும் சரியாக அவர்களை சென்றடைய ஆதார் வழிவகை செய்வதாகவும்,ஜூன்30, 2018 வாக்கில் 60.22 கோடி வங்கிகணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இதுவரை 121.65கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 3.5கோடி ஆதார் அட்டைகள் அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப ரீதியில்
ஆதார் அட்டையை பயன்படுத்தாமல் தொழில்நுட்ப ரீதியில் வேறு மாற்று ஏற்பாடுகள் செய்து அதென்டிகேட் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது.

மெய்நிகர் அட்டை
மெய்நிகர் அட்டை(வெர்சுவல் ஐடி) என்னும் தற்காலிக 16 இலக்க எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆதார் அட்டையை உபயோகப்படுத்தவேண்டிய இடங்களில் இந்த மெய்நிகர் எண்ணை பயன்படுத்தலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications