அரசு பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்சி.. தேர்ச்சி பெற்ற 5ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டு விருது.

|

அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைத் தயக்கம் காட்டும் பெற்றோர்கள் கட்டாயம் இந்த செய்தியைப் படிக்க வேண்டும். காரணம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை அரசுப் பள்ளி ஒன்றில் சுமார் 85 பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் என்ன-என்ன தனித்துவமான பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று பார்க்கலாம்.

85 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்ச்சி

85 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்ச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (IECD) முயற்சியால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏழைப் பின்னணியைச் சேர்ந்த 85 அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத் திறன்களின் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ் பல்வேறு சைபர் படிப்புகளுக்கான சான்றிதழ் பயிற்சி திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

45 பெண் மாணவர்கள் உடன் அனைத்து மாணவர்களுக்கும் அரசு பள்ளியில் IT பயிற்சி

45 பெண் மாணவர்கள் உடன் அனைத்து மாணவர்களுக்கும் அரசு பள்ளியில் IT பயிற்சி

இந்த பயிற்சியை 45 பெண் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் வெற்றிகரமாக முடித்து அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் கொத்தவாசல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கான வாசிப்புப் பொருட்கள் மற்றும் பயிற்சி கல்வி நடத்துவதற்குத் தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் IECD மூலம் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் கீழ் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.11,000 விலையில் அறிமுகமாகுமா ரெட்மி 10 பிரைம்.! இதோ முழு விவரம்.!ரூ.11,000 விலையில் அறிமுகமாகுமா ரெட்மி 10 பிரைம்.! இதோ முழு விவரம்.!

V ஆம் வகுப்பிலிருந்து VIII ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெவேறு விதமான பயிற்சி

V ஆம் வகுப்பிலிருந்து VIII ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெவேறு விதமான பயிற்சி

இந்த பயிற்சி 'நேருக்கு நேர்' கற்றல் திட்டத்தின் வழியாக ஜூன் 2019 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து மார்ச் 2020 வரை நடத்தப்பட்டது. கொத்தவாசல் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் உள்ள மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு நடைமுறை ஐடி திறன்களை வழங்குவதற்காக ஐஇசிடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசுப் பள்ளி இதுவாகும். கணினி படிப்புகள் IECD ஆல் V ஆம் வகுப்பிலிருந்து VIII ஆம் வகுப்பு வரை சிறுவர் மற்றும் சிறுமிகளுக்காக வடிவமைக்கப்பட்டது.

IT பயிற்சிக்கு தானாக முன்வந்த மாணவர்கள்

IT பயிற்சிக்கு தானாக முன்வந்த மாணவர்கள்

25 கணினி டெர்மினல்கள் மற்றும் இணைய வசதியுடன் கூடிய சைபர் லேப் பொருத்தப்பட்டிருப்பதால், இந்த பள்ளி IECD-யால் அடையாளம் காணப்பட்டது. மேலும் தொலைதூர பகுதியில் செயல்படும் ஒரு அரசுப் பள்ளியை அணுகும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக டாக்டர். ராம்கணேஷ் தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் உள்ள அனைத்து 85 மாணவர்களும் தானாக முன்வந்து ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்றார் போல் தனித்தனி ஐடி தொடர்பான சைபர் படிப்புகளுக்கு தங்களைத் தானாகவே முன்னெடுத்து வந்து சேர்த்துக் கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

எது? வெறும் ரூ.3,499 விலையில் ஆண்ட்ராய்டு 11 உடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா? முழு விபரம் இதோ..எது? வெறும் ரூ.3,499 விலையில் ஆண்ட்ராய்டு 11 உடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா? முழு விபரம் இதோ..

என்ன-என்ன வகுப்பு மாணவர்களுக்கு என்னென்ன பயிற்சி வழங்கப்பட்டது?

என்ன-என்ன வகுப்பு மாணவர்களுக்கு என்னென்ன பயிற்சி வழங்கப்பட்டது?

தரநிலை V மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்பு கணினி திறன் பற்றியது, அதே நேரத்தில் வகுப்பு VI மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்பு அலுவலக ஆட்டோமேஷன் பற்றியதாக இருந்துள்ளது. கிராஃபிக் டிசைன் படிப்பு ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வெப் டிசைனிங் தொடர்பான வடிவமைப்பு படிப்பிற்கான சான்றிதழ் படிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. IECD ஒரு தனியார் அறக்கட்டளை மற்றும் பள்ளி கணினி ஆசிரியருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு IT பயிற்சியை அளித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சைபர் படிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சைபர் படிப்பு

"ஏழை பின்னணியில் இருந்து வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி வாழ்க்கையை வடிவமைக்க உதவுவதற்காகப் பிரத்தியேகமாக ஐடி திறன்களை வழங்குவதற்கான ஐஇசிடியின் முதல் முயற்சி இது" என்கிறார் டாக்டர் ராமகணேஷ். தொலைதூரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரிதாகவே அணுகல் மற்றும் சைபர் படிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன்களுக்கான வசதி இருப்பதால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

இதுக்கு தான் ஒரு ஐபோன் வேணும்: விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தும் பாதிப்படையாத ஐபோன்.!இதுக்கு தான் ஒரு ஐபோன் வேணும்: விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தும் பாதிப்படையாத ஐபோன்.!

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருது

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருது

அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட 2019 - 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒவ்வொரு பயிற்சியிலும் முதலிடம் பெற்றவர்கள் இந்த ஆகஸ்ட் 25 அன்று நகரத்தின் கஜமலை வளாகத்தில் நடத்தப்பட்ட தேர்ச்சி விழாவின் போது விருதுகள் வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்படுவார்கள் என்று டாக்டர் ராமகணேஷ் கூறினார். குறிப்பாகப் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களைச் சென்றடைவதற்கான மற்றொரு மொபைல் சைபர் பயிற்சி கூடாரத்தை உருவாகும் முயற்சியை IECD விரைவில் நடத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொபைல் சைபர் ஆய்வகம்

மொபைல் சைபர் ஆய்வகம்

ஒரு பயணிகள் வாகனத்தை வாங்கி அதை ஒரு மொபைல் சைபர் ஆய்வகமாக 25 மடிக்கணினிகளுடன் துணைக்கருவிகள் மற்றும் இணையதள வசதியுடன் வாகனத்தை மாற்றம் செய்ய IECD யின் நிர்வாக கவுன்சில், மொபைல் சைபர் ஆய்வகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாகனம் ஆசிரியர்களுடன் சேர்ந்து தொலைதூர பள்ளிகளுக்குச் சென்று, ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணையப் படிப்புகள் குறித்த வாராந்திர வகுப்புகளை நடத்தும் என்று டாக்டர் ராமகணேஷ் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Government School Students In Perambalur Get Trained In IT Skills And Cleared Certificate Programmes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X