Home
News

ஆதாரில் போட்டோ, QR கோடு மட்டும்தான் இருக்குமா? விளக்கம் கொடுத்த அரசு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போல ஆதார் அட்டையும் (Aadhaar Card) மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அதுவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது.

இதுதவிர குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் பயன்படுகிறது. இந்நிலையில் QR குறியீடு கொண்ட ஆதார் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஆதாரில் போட்டோ, QR கோடு மட்டும்தான் இருக்குமா? விளக்கம் கொடுத்த அரசு..

அதாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆதார் அட்டையில் மாற்றம் செயல்படுகிறது என்றும், வெறும் புகைப்படம் மற்றும் QR கோடு உடன் மட்டுமே ஆதார் வெளியாகும் என்று வெளியாகும் தகவல்களுக்கு மத்திய மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரின் வடிவத்தில் மாற்றம் செய்யப்படுவதாகக் கூறும் செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தவறானவை என்றும், அவை பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மக்கள், Unique Identification Authority of India வழங்கும் சரிபார்க்கப்பட்ட சேனல்கள் மற்றும் Press Information Bureau மூலம் வெளியிடப்படும் பத்திரிகை அறிவிப்புகள் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தியது. மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

ஆதார் விரைவில் பெரிய மறுவடிவமைப்பை சந்திக்கலாம் என்ற தகவல்கள் இணையத்தில் அதிகமாகப் பரவி வரும் நிலையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, இப்படியான எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தி, தவறாக வழிநடத்தும் பதிவுகளை மக்கள் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் செயலியை (Aadhaar app) கொண்டுவந்தது. இதன் மூலம் இனி ஆதாரில் மொபைல் நம்பர், முகவரி போன்றவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம். இப்போது இந்த ஆதார் செயலியில் மொபைல் நம்பர் மாற்றம் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

ஆதார் செயலியில் மொபைல் நம்பர் அப்டேட் செய்வது எப்படி?

1. முதலில் உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் வழியாக ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

2.அடுத்து உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, பின்னர் உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும்.

3. அடுத்து ஆதார் செயலியின் முகப்பு பக்கத்தில் services என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் எண் புதுப்பிக்க வேண்டுமா அல்லது முகவரியைப் புதுப்பிக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் தோன்றும்.

ஆதாரில் போட்டோ, QR கோடு மட்டும்தான் இருக்குமா? விளக்கம் கொடுத்த அரசு..

4. இப்போது நீங்கள் மொபைல் எண் அப்டேட் செய்ய வேண்டுமென்றால் அதற்கான பழைய நம்பரை உள்ளிட்டு ஒடிபி-ஐ பெற்று புதிய நம்பரை உள்ளிட வேண்டும்

5.ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்கவும். அடுத்து இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். பிறகு, 15 நாட்களில் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.

source 1

Best Mobiles in India

English summary
Government Rejects Claims That Aadhaar Will Be Reduced to a QR Code
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X