ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறுது.. வாகன ஓட்டிகளே கவனம்.. வருகிறது புதிய ஃபாஸ்டேக் விதிகள்.. இதோ முழு விவரம்..
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பயண நேரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கவும் ஃபாஸ்டேக் கட்டண முறையை இந்திய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஃபாஸ்டேக் (FASTag) குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஏப்ரல் முதல் புதிய மாற்றம்
அதாவது 2026 ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்குச் சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, கேஷ் (பணம்) கொடுத்து டோல் கேட்டை கடக்க முடியாது என்று புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி ஃபாஸ்டேக் இல்லாத வானங்களுக்கு தற்போது இரட்டை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்போது ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாக சுங்கக் கட்டணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கும் செலுத்தும் நிலை உள்ளது. அதுவே யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறைகள் மூலம் பணம் செலுத்தினால் வழக்கமான கட்டணத்தில் 1.25 மடங்கு மட்டுமே வசூலிக்கப்படும்.
குறிப்பாக ரொக்கப் பணத்தை விட டிஜிட்டல் முறைகளுக்குக் குறைவான கட்டணம் வசூலிப்பதன் மூலம், மக்களை ஃபாஸ்டேக் அல்லது யுபிஐ போன்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு மாற தூண்டுவது அரசின் முக்கிய திட்டமாகும்.
ஆகவே வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் ஏப்ரல் முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்குச் சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, கேஷ் கொடுக்க முடியாது, ஒன்று டேக் பயன்படுத்த வேண்டும் அல்லது அபராதத்தோடு யுபிஐ வழியாகச் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஃபாஸ்டேக் இருந்தால் அதைப் பயன்படுத்தி மட்டுமே டோல் கேட்டை கடக்க முடியும். அந்த அளவிற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்
குறிப்பாக ஃபாஸ்டேக் ஆனது மக்களின் பணத்தைச் சேமிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் பயணத்தை மேலும் வசதியாகும், அழுத்தமின்றியும் மாற்றுகிறது. அதுவும் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1,159 சுங்கச்சாவடிகளில் இது செல்லுபடியாகும்.

மேலும் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்களை பயன்படுத்தி தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுங்கச்சாவடிகளில் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக NHAI தெரிவித்தது. அதுவும் இந்த வருடாந்திர சுங்க பாஸ் என்பது ஒரு ப்ரிபெய்ட் வசதியாகும். குறிப்பாக இதன் மூலம் தனியார் வாகன ஓட்டிகள் ஒருமுறை கட்டணம் செலுத்தி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகளில் இருக்கும் 200 சுங்கச்சாவடிகள் வரை இலவசமாகப் பயணிக்கலாம். ஒவ்வொரு பாஸின் விலையும் ரூ.3000 ஆகும். இந்த வசதி கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்குக் கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.
அதுவும் இந்த ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்களுக்கு, எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். மேலும் பயண வரம்பு எட்டப்பட்டதும், ஃபாஸ்டேக் தானாகவே நிலையான பயணக் கட்டண முறைக்கு மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








