கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி: பெறுவது எப்படி?
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொதுமக்கள் பின்பற்றுவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கும்படி சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கை குறித்து பயனர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் டயலர் ட்யூன் ஒலிக்கச் செய்யப்பட்டு வருகிறது.

அதேசமயம் தென் ஆப்ரிக்கா மற்றும் சில நாடுகளில் பரவி வந்த ஒமைக்ரான் எனப்படும் மோசமான கொரோனாவைரஸ்
இந்தியாவிலும் நுழைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் இரண்டு பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பேசுகிற மருத்துவ உலகம் இது குறித்து அச்சம்கொள்ளத் தேலையில்லை என்கிற ரீதியில் ஆறுதல் அளித்துவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தொடரும் அறிவிப்பு கூடுதல் ஆறுதலை தருகிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு என்பது ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே இந்த வைரஸ் ஏற்படுத்துகிற பாதிப்புகளை முழுமையாக கண்டறியவும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கும் இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் எனத் தகல்கள் வெளிவந்துள்ளது. ஆனாலும்கூட, கொரோனாவைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் எந்தவித அலட்சியமும் காட்டக் கூடாது.

இந்நிலையில் கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அதுவும் ஆன்லைன் மூலமாகவே பாதிக்கப்பட்டோர்கள் நிவாரணத் தொகையை கேட்டு விண்ணப்பிக்க எளிதான வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியுதவி பெறும் வழி முறை குறித்து அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்க அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவி பெறுவததை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in எனும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் இருக்கும் வாட்ஸ் நியூ (what's new)பகுதியில் Ex-Gratia for Covid-19 கிளிக் செய்தால் கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பம் மூலம் உதவித் தொகைபெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதேபோல் கொரோனா தொற்றினால் குடும்பத்தில் ஒருவர் மரணமடைந்த நிலையில், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் (முன்கள பணியாளர்கள்) பெற்றவர்கள், இரண்டு பெற்றோரையும் இழந்து ஐந்து லட்சம் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து ரூ.3 லட்சம் பெற்ற குழந்தைகளுக்கு இந்த அரசாணை பொருந்தாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications