Home
News

ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு: இனிமேல் இந்த அப்டேட் மிகவும் முக்கியம்.!

சமீபத்தில் ரேஷன் அட்டைகள் அப்டேட் தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும்,இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே நன்மை அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரேஷன் கடைகளில் உள்ள தகவல்

அதேபோல் ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகைகளில் பொருட்கள் என்னென்ன உள்ளன, அப்பொருட்களின் கையிருப்பு என்ன? அவைகளின் விலைகள் என்ன? என்பது குறித்து நோட்டீஸ் போர்டில் தெளிவாக குறித்து வைக்க வேண்டும். ஆனால் சில ரேஷன் கடைகளில் இந்த நடைமுறையை யாரும் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே நோட்டீஸ் தகவல் பலகைகளில் பொருட்களின் கையிருப்பு விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுஅவற்றின் விலைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இணையம் மற்றும் தொழில்நுட்பத்

மேலும் இணையம் மற்றும் தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்பின்றி இதர வழிகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

நிலையில் மற்றொரு அறிவிப்பினை ரேஷன்

இந்த நிலையில் மற்றொரு அறிவிப்பினை ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரிவிடடுள்ளது. அதாவது திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் அதிகமான மக்கள் புதிய அட்டைகளுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு ஆவணங்களை சரிபார்ப்பது தாமதமில்லாமல் அட்டைகளை விநியோகிக்க உத்தவிடப்பட்டிருந்தது.

ந்த அட்டைகளில் புதிய

தற்போது இந்த அட்டைகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது போல் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், இறந்தவர்களின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த உத்தரவுகளை சரிவர செயல்படுத்தாத ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

இறந்தவரின் பெயரை நீக்காமல்

மேலும் இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், பின்பு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்காத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

போலி குடும்ப அட்டைகளை களையும்

அதாவது போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த உத்தரவு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Government of Tamil Nadu important order to renew ration card: full details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X