Home
News

இனிமேல் 'இந்த" வாகனங்களுக்கும் இ-பதிவு கட்டாயம்.! தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த ஊரடங்கின் போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்தியாவசியப் பொருட்களை

அதன்படி அத்தியாவசியப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities and Medical Supplies)மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டி தொடர் செயல்முறைத் தொழிற்சாலைகள் (Continuous Process Industries) ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ரக்கு கிடங்குகள், தொலைதொடர்பு சேவைகள், விமான நிலை

மேலும் துறைமுகங்கள், சரக்கு கிடங்குகள், தொலைதொடர்பு சேவைகள், விமான நிலையங்கள், அத்தியாவசிய தரவு மையங்கள்மற்றும் பரமாரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலைகளு

இந்த நிலையில் தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் இ-பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது எனவும் கூறப்படுகிறது.

 அனுமதி

அதாவது முக்கிய தொழிற்சாலை பணியாளர்கள் பணிக்கு சென்றுவர ஏற்கனவே இ-பதிவு முறையில் https://eregister.tnega.org/#/user/pass
இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள். அதன்படி ஏற்கனவே பதிவு செய்துள்ள நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத்

மேலும்சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கியாதாகக் கூறப்படும் இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.

யை விட பன்மடங்கு வே

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

லையின்போது கொரோனா

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள்
மக்களை எச்சரித்து வருகின்றனர்

Best Mobiles in India

English summary
Government of Tamil Nadu announces that e-registration is mandatory for industrial vehicles: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X