Home
News

சிம் டீலர்களுக்கு இந்திய அரசு வைத்த செக் மேட்.. இனி 1 சிம் கார்டுக்கு மேல் யாரும் வாங்க முடியாது..

இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க நிறுவனம் பல முயற்சிகளையும், முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது இந்திய அரசு சிம்-கார்டு (SIM card) விற்பனையாளர்களுக்கு புதிய விதியை விதித்துள்ளது.

இந்தியாவில் நிகழும் இணைய வழி மோசடிகளைத் தடுக்க, இந்திய அரசாங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் இரண்டு புதிய சீர்திருத்தங்களை இந்திய அரசு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சீர்திருத்தங்களும் சிம் கார்டுகள் (SIM card) மற்றும் அவற்றின் டீலர்கள் மீது கவனம் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிம் டீலர்களுக்கு இந்திய அரசு வைத்த செக் மேட்.. இனி 1 சிம் கார்டு தான்

இந்தியாவில் இணைய மோசடி அதிகரிப்பதற்கான (Internet fraud) முக்கிய காரணங்களில் ஒன்று சிம் கார்டுகளை மோசடிக்காரர்கள் எளிதாக அணுகுவது தான் என்று பல காலமாக குறிப்பிடப்படுகிறது. சிம் கார்டுகளை மோசடி செய்பவர்கள் பயன்படுத்தி தங்கள் அடையாளங்களை மறைத்து சைபர் கிரைம்களில் (cyber crime) ஈடுபடுகின்றனர். பெரும்பாலான மோசடிக்காரர்கள் பல்க்காக சிம் கார்டுகளை (Bulk SIM card) வாங்கி அவற்றை மோசடியாக பயன்படுத்துகிறார்கள்.

இப்படி மோசடிக்காரர்கள் மொத்தமாகவும், அதிக எண்ணிக்கைளையும் சிம் கார்டுகளை வாங்கலாம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு (Government of India) சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இதற்காக, இந்திய அரசாங்கம் இப்போது இரண்டு புதிய சீர்திருத்தங்களைக் சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு (New rules for SIM card dealers) கொண்டு வந்துள்ளது. சிம் கார்டு வாங்குபவர்கள் வழக்கம் போல அடையாள ஆவணங்களை வழங்கி சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

சமீபத்திய அறிக்கையின் படி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw, union telecom minister) கூறுகையில், சிம் டீலர்கள் மற்றும் அவர்களின் விபரங்களை காவல்துறையால் சரிபார்க்கப்படுவதை (mandate police verification) அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது என்று கூறினார். சிம் பரிவர்த்தனை நடவடிக்கைகள் தவறான நபர்களின் கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய படியாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிம் டீலர்களுக்கு இந்திய அரசு வைத்த செக் மேட்.. இனி 1 சிம் கார்டு தான்

தொலைத்தொடர்பு அமைச்சர் கூறியது போல், மொத்த சிம் விற்பனையையும் (bulk sim card selling banned) அரசு நிறுத்தியுள்ளது. அதாவது, இனி யாரும் இந்தியாவில் பல்க் ஆக சிம் கார்டுகளை வாங்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே இப்போது, ​​மோசடி செய்பவர்கள் குற்றங்களைச் செய்ய மொத்த சிம்களை அணுக முடியாது. இதன் மூலம் கணிசமான எண்ணிக்கையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறைக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் நம்புகிறது.

வழக்கமான நுகர்வோர் சைபர் கிரைமில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை இந்த இரண்டு சீர்திருத்தங்களும் உறுதி செய்கின்றன. இந்த சீர்திருத்தங்கள் முற்றிலும் நுகர்வோர் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன என்று வைஷ்ணவ் கூறினார். மேலும், 67,000 க்கும் மேற்பட்ட சிம் டீலர்கள் (SIM card dealers) தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 300 எஃப்ஐஆர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சிம் டீலர்களுக்கு இந்திய அரசு வைத்த செக் மேட்.. இனி 1 சிம் கார்டு தான்

மேலும், சட்டவிரோதமாக பெறப்பட்ட அல்லது மோசடியாக பெறப்பட்ட 17,000 மொபைல் போன்களையும் இந்திய அரசு முடக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை நாட்டில் சைபர் கிரைம்களில் கணிசமான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். வைஷ்ணவ், "நாட்டின் குறிப்பிட்ட பாக்கெட்டுகளில் செயல்படும் மோசடி செய்பவர்கள், அழுத்தத்தை உணரத் தொடங்கியுள்ளனர்." என்று கூறியுள்ளார்.

குறிப்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு இன்னும் நல்ல அளவில் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளின் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்த புதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மொத்த சிம் இணைப்பு வாங்குவது இனி இந்தியாவில் சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Government Of India Stops Bulk SIM Card Selling and Mandate Police Verification For SIM Dealers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X