இந்தியாவில் இனி 'கலர் டிவி' இறக்குமதிக்கு தடை! இந்திய அரசாங்கம் விதித்த அதிரடி கட்டுப்பாடு!

|

மேக் இன் இந்தியா முன்முயற்சியை அதிகரிக்கும் முயற்சியாக, பிற நாட்டு வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசு தற்பொழுது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அதிரடியாகக் கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றைத் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது.

வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதி செய்ய தடை

வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இறக்குமதி செய்ய தடை

இந்தியாவில் சில பிரிவுகளில் தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு இனி அரசாங்கத்திடம் இருந்து கட்டாய உரிமம் தேவைப்படும் என்று இந்திய அரசாங்கம் தற்பொழுது தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) இந்த தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. டி.ஜி.எஃப்.டி மேலும் உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகள் பற்றிய தகவல்களை அடுத்து வெளியிடும் என்று கூறியுள்ளது.

பிளாக் அண்ட் வைட் மோனோகிறோம் டிவிகளுக்கும் தடையா?

பிளாக் அண்ட் வைட் மோனோகிறோம் டிவிகளுக்கும் தடையா?

டி.ஜி.எஃப்.டி வெளியிட்டுள்ள தகவலின் படி, உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகள் தனித்தனியாக வெளியிடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த இறக்குமதி தடை வண்ண தொலைக்காட்சி பெட்டி வகைக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளாக் அண்ட் வைட் மோனோகிறோம் டிவிகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

உள்நாட்டு டிவி உற்பத்தியை அதிகரிக்க உதவும்

உள்நாட்டு டிவி உற்பத்தியை அதிகரிக்க உதவும்

இந்த நடவடிக்கை மேக் இன் இந்தியா இயக்கத்தை உயர்த்துவதாகவும், இது நாட்டில் உள்ள உள்நாட்டு டிவி உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய டிவி நிறுவனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்ய உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை VU டிவி மற்றும் TCL உள்ளிட்ட பல டிவி உற்பத்தியாளர்களின் வணிகத்தைப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பிராண்டுகளுக்கு இந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும்

பல பிராண்டுகளுக்கு இந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும்

இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சோனி, சாம்சங், சியோமி, எல்ஜி மற்றும் பல பிராண்டுகளின் சில உயர்நிலை ஸ்மார்ட் டிவிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இந்திய அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கை சீனா மற்றும் தாய்லாந்து, மலேசியா போன்ற பிற நாடுகளிலிருந்து கண்மூடித்தனமாக இறக்குமதி செய்யப்படும் டிவி இறக்குமதியைத் தடுக்கும் என்று பல தொழில் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?

வல்லுநர்களின் சந்தேகம்

வல்லுநர்களின் சந்தேகம்

இந்திய அரசாங்கத்தின் இந்த தடைக்குப் பின்னணியில் சில திட்டமிடப்படாத விளைவுகள் இருக்கிறது என்பதையும் வல்லுநர்கள் சந்தேகித்துள்ளனர். இதற்குக் காரணம், வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் இந்தியா ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) கொண்டுள்ளது. இருப்பினும், தென்கிழக்கு ஆசிய நாடு வழியாகச் சீனாவிலிருந்து மின்னணு பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற சந்தேகம் இவர்களுக்கு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Government Of India Has Imposed Restrictions On Importing Color TV Sets In The Country : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X