உஷார் மக்களே.! இனி உங்க WhatsApp சாட் பாதுகாப்பானதல்ல.! உண்மைய உடைச்சுட்டாங்க.!

|

இந்தியாவிலும், உலகளவிலும் பல கோடி மக்கள் வாட்ஸ்அப் (WhatsApp), டெலெக்ராம் (Telegram) மற்றும் சிக்னல் (Signal) போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பர்சனல் அல்லது அஃபிஷியல் என்று நம் தினசரி வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களையும் நாம் இந்த ஆப்ஸ்கள் மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இப்படிப்பட்ட ஆப்ஸ்களில் தனிநபர் பிரைவசி என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது.!

எது.! சாட்டிங் ஆப்ஸ் பிரைவசியில் அரசாங்கம் குறுக்கிடுகிறதா?

எது.! சாட்டிங் ஆப்ஸ் பிரைவசியில் அரசாங்கம் குறுக்கிடுகிறதா?

என்ன தான், இந்த ஆப்ஸ் நிறுவனங்கள் நமக்கு தேவைப்படும் தனியுரிமை மற்றும் பிரைவசியை முழுமையான பாதுகாப்புடன் வழங்க முன் வந்தாலும், நம்முடைய அரசாங்கம் இடையில் ஒரு குளறுபடியை உருவாக்கி வருகிறது.

ஆம், நாம் பயன்படுத்தும் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் (Messaging Apps) மூலமாக அனுப்பப்படும் செய்திகளைத் தேவைப்பட்டால் படிப்பதற்கும், பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படக் கூடிய அம்சத்தை மெசேஜ்ஜிங் ஆப்ஸ் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

எண்ட்-டு-எண்டட் என்கிரிப்ஷன் செய்யப்பட்ட தகவலை எப்படி அரசு படிக்க முடியும்?

எண்ட்-டு-எண்டட் என்கிரிப்ஷன் செய்யப்பட்ட தகவலை எப்படி அரசு படிக்க முடியும்?

கேட்பதற்கே கொஞ்சம் ஷாக்கிங்.! ஆக இருந்தாலும் கூட, இத்தகைய நடவடிக்கையை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது என்பது உண்மையாகும்.!

சரி, நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், சிக்னல் போன்ற தளங்களில் அனுப்பப்பட்டு செய்திகள் அனைத்தும் எண்ட்-டு-எண்டட் என்கிரிப்ஷன் (End-to-end encryption) செய்யப்பட்டது தானே - இதை எப்படி அரசு படிக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கும் தெரிகிறது. உங்கள் கேள்வி நியாயமானது தான்.!

BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!

என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவலை படிக்கச்

என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவலை படிக்கச் "பேக் டோர்" அம்சமா? இது சாத்தியமா?

என்கிரிப்ட் செய்யப்பட்ட செய்திகளைப் படிக்க அனுமதிக்கும் ஒரு மறைமுகமான பேக்டோர் அம்சத்தைத் தான் வழங்கும்படி அரசாங்கம் பரிந்துரைக்கிறது என்று சாட்டிங் பிளாட்பாரம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் போன்ற ஆப்ஸ் மூலம் பகிரப்படும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட செய்திகள் அல்லது சாட்களை அணுகக்கூடிய, ஒரு வழிமுறை நிறுவனங்களால் உருவாக்க முடியுமா? இது சாத்தியமா? என்ற கேள்வி தான் அடுத்து நமக்குள் எழுகிறது.

வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் ஆப்ஸ்களில் பேக் டோர் உருவாக்கலாமா?

வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் ஆப்ஸ்களில் பேக் டோர் உருவாக்கலாமா?

வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் போன்ற சாட்டிங் ஆப்ஸ்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை நாம் உருவாக்க முடியுமென்றும், இப்போது இவை சாத்தியம் என்றும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஆனால், சிக்னல் ஆப்ஸ் இதை செய்யாது என்றும், அதன் சாட்டிங் ஆப்ஸிற்கான முழு தனியுரிமை பாதுகாப்பு குறித்த வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

சமீபத்திய டெலிகாம் மசோதாவின் பின்னணியில் என்ன விஷயங்கள் பரிந்துரைக்கப்பட்டது என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

அரசு போட்ட நிபந்தனைக்கு Signal ஆப்ஸ் என்ன செய்தது தெரியுமா?

அரசு போட்ட நிபந்தனைக்கு Signal ஆப்ஸ் என்ன செய்தது தெரியுமா?

இந்தியாவில் சாட்டிங் ஆப்ஸ்கள் அவற்றின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை உடைக்க கட்டாயப்படுத்தும் சட்ட கட்டமைப்பை அரசாங்கம் முன்மொழிகிறது என்று சிக்னல் ஆப்ஸ் இன் தலைவர் மெரிடித் விட்டேக்கர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும், சிக்னல் சாட்டிங் ஆப்ஸ் பலவீனமடையாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய பயனர்களுக்கு வழங்கும் தனியுரிமை பாதுகாப்பில் எந்த மாற்றத்தையும் Singal செய்யாது என்றும் கூறியுள்ளார்.

இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!

இதை நாங்கள் ஒரு போதும் செய்ய மாட்டோம் - Signal

இதை நாங்கள் ஒரு போதும் செய்ய மாட்டோம் - Signal

தி வெர்ஜ் உடனான உரையாடலில், சிக்னலின் தலைவர் மெரிடித் விட்டேக்கர், பயனர்களின் தனியுரிமையில் பயன்பாடு ஒருபோதும் சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்தினார்.

"இந்தியாவில் சிக்னலைப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு நாங்கள் இன்னும் இருக்கிறோம். நாங்கள் தனியுரிமையில் சமரசம் செய்யப் போவதில்லை, அதுதான் எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்திருக்கிறார்.

WhatsApp செய்யும்

WhatsApp செய்யும் "இந்த" தவறை நாங்கள் செய்வதில்லை.!

சிக்னல் மற்றும் வாட்ஸ்அப் இரண்டும், பல அரட்டை பயன்பாடுகளுடன், பயனர்களுக்கு என்கிரிப்ட் செய்யப்பட்ட அழைப்பு மற்றும் மெசேஜ் அம்சங்களை வழங்குகின்றன.

ஆனால், வாட்ஸ்அப் அதன் பயனர்களிடமிருந்து நிறைய மெட்டா டேட்டாவையும் சேகரிக்கிறது என்றும், அவை என்கிரிப்ட் செய்யப்படாத வடிவத்தில் இருக்கிறது என்றும் சிக்னல் தலைவர் எச்சரித்துள்ளார்.

உலகின் மிகவும் பாதுகாப்பான மெசேஜ்ஜிங் ஆப்ஸாக கருதப்படும் சிக்னல் இந்தத் தரவைச் சேகரிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மெசேஜ்ஜிங் ஆப்ஸ்கள் உண்மையிலேயே முழு பிரைவசியை வழங்குகிறதா?

மெசேஜ்ஜிங் ஆப்ஸ்கள் உண்மையிலேயே முழு பிரைவசியை வழங்குகிறதா?

என்கிரிப்ட் செய்யப்பட்ட செய்திகளை அரசு நிறுவனங்கள் எவ்வாறு அணுக முடியும் என்பது பற்றி நாம் யோசிக்கும் போதெல்லாம், அத்தகைய தேவை ஏதேனும் இருந்தால், பாதுகாப்பு அல்லது என்கிரிப்ட் செய்யப்படும் தரநிலைகளைப் பலவீனப்படுத்த அதில் ஒரு மறைமுக பேக் டோர்களை உருவாக்குவதன் மூலம் இவற்றைச் சாத்தியப்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படிச் செய்யப்படும் நேரத்தில் உங்கள் பிரைவசி முழுமையாக பதுக்கப்படுகிறது என்று நீங்கள் நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

சாட்டிங் ஆப்ஸ்களை அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறதா?

சாட்டிங் ஆப்ஸ்களை அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறதா?

சாட்டிங் ஆப்ஸ்களில் இருக்கும் செய்திகளை படிக்க அரசாங்கத்திற்கு சில வழிகளை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை இந்தியா இயற்றினாலும், கட்டாயப்படுத்தினாலும், சிக்னல் ஆப்ஸ் அதன் பயன்பாட்டை பலவீனப்படுத்தாது என்று அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

தெளிவாகக் கூற வேண்டுமென்றால், நாங்கள் பயனர்களின் தனியுரிமையைச் சமரசம் செய்யும் தொழிலில் இல்லை, அதை சிக்னல் ஒரு போதும் செய்யப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! "இது" தெரியலான சிக்கல் வரலாம் மக்களே.!

கவர்மெண்ட் ரேடாரில் சாட்டிங் பயன்பாடுகள்.!

கவர்மெண்ட் ரேடாரில் சாட்டிங் பயன்பாடுகள்.!

குறிப்பாக வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னலில் உள்ள என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட சாட்கள் மீது எப்படி ஒரு கட்டுப்பாட்டை எடுப்பதென்று இந்திய அரசாங்கம் சிறிது காலமாகக் கவனித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம், சாட் ஆப்ஸ்கள் தங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட தொழில்நுட்பங்களில் பேக் டோர் அம்சத்தை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேக் டோர் அம்சம் வந்தால்

பேக் டோர் அம்சம் வந்தால் "என்கிரிப்ட்" வார்த்தைக்கு என்ன அர்த்தம் இருக்கும்?

இருப்பினும், நிறுவனங்கள் இதற்கு ஒப்புக்கொண்டதா இல்லையா என்ற எந்த தெளிவான தகவலும் வெளியாகவில்லை.

தொழில்நுட்ப ரீதியாக ஒரு பேக் டோர் அம்சத்தை கொண்ட ஒரு என்கிரிப்ட் செய்யப்பட்ட அமைப்பை சாட்டிங் ஆப்ஸ்கள் ஒரு போதும் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்யப்பட்டால், "என்கிரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பான" என்ற வார்த்தையை இனி யாரும் பயன்படுத்த முடியாது என்பதனால் இது நடைமுறையில் சிக்கலை உருவாக்குகிறது.

உங்கள் பிரைவசியை எப்படி பாதுகாப்பது?

உங்கள் பிரைவசியை எப்படி பாதுகாப்பது?

DoT இன் இந்த ஒழுங்குபடுத்தும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு TRAI கேட்டுக் கொண்டுள்ளது.

எது எப்படியாக இருந்தாலும், நீங்கள் எந்த மெசேஜ்ஜிங் ஆப்ஸ் பயன்படுத்தினாலும், அவற்றில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பேக் டோர் உருவாக்கப்படலாம் என்பதை நினைவில் வைத்து பாதுகாப்பாகப் பயன்படுத்தத் துவங்குங்கள்.

உங்கள் பாதுகாப்பை இனி நீங்களே பத்திரப்படுத்திக்கொண்டு பாதுகாப்பாகச் செயல்படுவது சிறப்பானது.

Best Mobiles in India

English summary
Government Legally Forced WhatsApp and Signal Chat Apps To Build Backdoor Into Their Encryption Technology

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X