Google Chrome, Mozilla பயன்படுத்துபவரா நீங்கள்: உடனே இதை செய்யும்- அரசு விடுத்த எச்சரிக்கை!

|

கூகுள் க்ரோம் மற்றும் மொஸில்லா தளங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கர்களுக்கு பயனர்களின் அனைத்து தரவுகளின் அணுகலையும் வழங்க இந்த பாதிப்பு வழிவகுக்கிறது எனவும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடந்து தன்னிசையான குறியீடுகளை செயல்படுத்த இந்த பதிப்புகள் அனுமித்தது எனவும் CERT-In கூறியுள்ளது. அதாவது இலக்கு வைக்கப்பட்ட சாதனங்களில் தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்த ஹேக்கர்கள் இந்த பயன்பாடுகளில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

பாதிப்புகள் இருப்பதாக எச்சரிக்கை

பாதிப்புகள் இருப்பதாக எச்சரிக்கை

CERT-In ஆனது க்ரோம் மற்றும் மொஸில்லாவின் பல தயாரிப்புகளில் பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து க்ரோம் மற்றும் மொஸில்லா தங்கள் தளங்களின் பாதிப்பை சரிசெய்து புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது. எனவே கூகுள், மொஸில்லா பயனர்கள் தங்கள் உலாவியை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு

மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு

மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு (CERT-In) சமீபத்தில் க்ரோம் மற்றும் சில Mozilla தயாரிப்புகளில் உள்ள பல பாதிப்புகளை சுட்டிக்காட்டியது. மேலும் இந்த குறைபாடுகளானது ஹேக்கர்கள் பயனர்களின் அனைத்து தரவையும் அணுக அனுமதித்தது மற்றும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தவிர்த்து தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்த இந்த பதிப்புகள் அனுமதித்தது எனவும் தெரிவித்தது. இந்த தாக்குதலின் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவலை ஹேக்கர்களால் எளிதில் பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்படும் சேவைகளில் மின்னஞ்சல், இணையதளங்கள், ஆன்லைன் கணக்குகள் உள்ளிட்டவை அடங்கும்.

சமீபத்திய பதிப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தல்

சமீபத்திய பதிப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தல்

96.0.4664.209-க்கு முன் வெளியாகி இருந்த Chrome OS பதிப்புகள் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக CERT-In தெரிவித்துள்ளது. அதேபோல் CVE-2022-1489, CVE-2022-1633, CVE-202-1636, CVE-2022-1859, CVE-2022-1867 மற்றும் CVE-2022-23308 என CERT-In பாதிப்பை ஏற்படுத்தும் பதிப்புகளை வகைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப ஜாம்பவனான கூகுள் இந்த பிழைகளை ஒப்புக் கொண்டு, அனைத்து பிழைகளும் சரிசெய்து விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பாக இருக்க க்ரோம் ஓஎஸ்-ன் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்யும்படி பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட கணினியை இலக்கு வைத்து தாக்குதல்

குறிப்பிட்ட கணினியை இலக்கு வைத்து தாக்குதல்

அதேபோல் Mozilla Firefox iOS பதிப்பில் இருந்த பாதிப்புகளையும் CERT-In சுட்டிக்காட்டியது. 91.10-க்கு முன் வெளியாகி இருந்த Mozilla Firefox Thunderbird பதிப்பு, 91.10-க்கு முந்தைய Mozilla Firefox ESR பதிப்பு மற்றும் 101-க்கு முந்தைய Mozilla Firefox பதிப்பு ஆகியவற்றில் பிழைகள் இருந்ததாக CERT தெரிவித்துள்ளது. ரிமோட் அட்டாக் எனப்படும் குறிப்பிட்ட கணினியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துபவர்களின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை இந்த தளங்கள் கொண்டிருந்ததாக நிறுவனம் கூறியுள்ளது.

பதிப்புகளை மேம்படுத்த சொன்ன Mozilla

பதிப்புகளை மேம்படுத்த சொன்ன Mozilla

இதையடுத்து பாதிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான புதுப்பிப்புகளை Mozilla வெளியிட்டுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயனர்கள் Mozilla Firefox iOS 101, Mozilla Firefox Thunderbird பதிப்பு 91.10, Mozilla Firefox ESR பதிப்பு 91.10 மற்றும் Mozilla Firefox பதிப்பு 101 ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

க்ரோம் பதிப்பு குறித்து எச்சரிக்கை

க்ரோம் பதிப்பு குறித்து எச்சரிக்கை

கடந்த மார்ச் மாதமும் இதேபோல் CERT-In கூகுள் க்ரோம் பதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்தது. கூகுள் குரோம் பதிப்பு 99.0.4844.74-க்கு முந்தைய க்ரோம் உலாவியைப் பயன்படுத்துபவர்களுக்கு CERT-In எச்சரிக்கை வெளியிட்டது. குறிப்பாக கணினியை இலக்காக வைத்து சைபர் அட்டாக் நடத்துவதற்கு சாதகமான பல காரணிகள் கூகுள் க்ரோம் உலாவியில் கண்டறியப்பட்டுதாக அரசு தெரிவித்தது. அதேபோல் கூகுள் க்ரோமில் பல தீங்கிழைக்கும் பக்ஸ் கண்டறியப்பட்டுள்ளதாக CERT-In எச்சரிக்கை விடுத்தது. உங்களது கூகுள் குரோம் உலாவி மூலம் மடிக்கணினிகள், மொபைல், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களில் சைபர் தாக்குதல் நடத்துவதற்கு இந்த பக்ஸ் வழிவகுக்கும் என தெரிவித்தது.

பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு

பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு

இதுபோன்ற தாக்குதலின் மூலம் ஹேக்கர்கள் தன்னிச்சையான குறியீட்டைப் பயன்படுத்தி மொபைல்கள், கணினிகள் உள்ளிட்ட பிற சாதனங்களின் அணுகலை பெறுகிறார்கள். இந்த வகையான தாக்குதல்களில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. கூகுள் க்ரோம் உலாவியின் பழைய பதிப்புகளில் இருக்கும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளானது ஹேக்கர்கள் எளிதில் தகர்க்கும் வகையில் இருப்பதாக CERT-In தெரிவித்தது.

hindustantimes.com

Best Mobiles in India

English summary
Government Issues Warning For Google Chrome, Mozilla Users in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X