Home
News

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய வேகம்? BSNL திட்டங்கள் விலை உயர்த்தப்படுமா? அமைச்சர் பதில்..

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் துவங்க அனுமதி பெற்றுள்ளார். குறிப்பாக இந்த ஸ்டார்லிங்க் நிறுவன வருகையால் பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இணைப்புகளை மட்டுமே வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவன கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் (Union Minister Pemmasani Chandra Sekhar) அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல முக்கிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய வேகம்? அமைச்சர் பதில்..

அதில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வருகை பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்குப் போட்டியாக அமையுமா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதில் பதில் அளித்த அவர் இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் 20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இணைப்புகளை வழங்க முடியும் எனக் கூறினார். அதுவும் ஸ்டார்லிங்க் நிறுவனம் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் (200 Mbps speed) மட்டுமே இணையச் சேவை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இதனால் அரசு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அதேசமயம் தற்போது இந்தியாவில் இணைய சேவை என்பது டவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் ஸ்டார்லிங் ஆனது நேரடியாக சாட்டிலைட் வாயிலாகவே இணைய சேவை வழங்கும். இதனால் அனைத்து இடங்களிலும் வேகமான இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் இந்தியாவில் முதல் முதலில் சாட்டிலைட் அடிப்படையில் இணைய சேவையை வழங்க உள்ளது ஸ்டார்லிங்க் நிறுவனம். அதுவும் ஸ்டார்லிங்க நிறுவனத்தின் இலக்கு இந்தியாவில் இணைய வசதி இதுவரை சென்று சேராத கிராமப்புற மற்றும் மலைப்பிரதேச பகுதிகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் பிஎஸ்என்எல் இங்கு தான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. எனவே ஸ்டார்லிங்க் சேவை இந்நிறுவனத்தைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் அவ்வாறு பாதிப்பு இருக்காது என அமைச்சர் கூறியுள்ளார். அதேசமயம் ஸ்டார்லிங்க் போன்ற சாட்டிலைட் அடிப்படையிலான இணையச் சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் மாதம்தோறும் ரூ.3000 வரை கட்டணம் வசூல் செய்யும் என்பதால் மக்கள் அத்தனை எளிதாக பிஎஸ்என்எல் உள்ளிட்டவற்றை விடுத்து அதற்குச் சென்று விட மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய வேகம்? அமைச்சர் பதில்..

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதில் அளித்த அவர், பிஎஸ்என்எல் தற்போதைக்கு 4ஜி சேவை விரிவாக்கம் செய்து வருகிறது, கட்டணங்களை உயர்த்தும் திட்டத்தை தற்போது இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே வெளியான தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை (BSNL 4G) விரிவாக்கம் செய்து வருகிறது. அதேசமயம் சில முக்கிய நகரங்களில் 5ஜி சோதனை செய்து வருகிறது. எனவே இந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Government imposes limits on Starlink: Only 2 million customers allowed: Speed capped at 200Mbps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X