இனி ஆன்லைன் வகுப்புக்கு இதெல்லாம் செய்யனும்: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

|

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான பல்வேறு புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கம்

உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்

பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழையும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகம்

2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகம்

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

கொரோனா கட்டுப்படுத்துவதில் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடடா! ஜிமெயிலில் இதெல்லாம் பண்ணலாமா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!அடடா! ஜிமெயிலில் இதெல்லாம் பண்ணலாமா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சரண்யா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வசதி படைத்தவர்கள் ஸ்மார்ட்போன் இணைய இணைப்பு அனைத்தும் இருக்கும். அவர்கள் எளிதாக பின்பற்றி பாடம் படிப்பார்கள். கிராமப்புற மாணவர்கள் போன்றோரின் நிலை என்ன போன்ற கேள்விகளை முன்வைத்து வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது என்றும், டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாது என்றும் டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு சேனல் என்றும் 5தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும். 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் 9 முதல் 12 வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Government human resource department announces guidelines for school online class

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X