Aadhaar கார்டில் பிழையா? திருத்தம் செய்ய அலைய வேண்டாம்.. இனி இந்த இடங்களிலும் திருத்தம் செய்யலாம்..
நாட்டில் வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் சிம் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை (Aadhaar Card)பயன்படுகிறது. மேலும் இப்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆதார் மிகவும் அவசியமாக உள்ளது. இந்நிலையில் ஆதார் தொடர்பாக இந்தியா போஸ்ட் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா போஸ்ட் (India Post) எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியான தகவலின்படி, ஆதார் தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக இந்தியா முழுவதும் 13,352 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது ஆதார் அட்டையை புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்களில் இருந்து விடுபட, இனி தபால் நிலையங்களிலும் இந்த வசதியை மக்கள் பெறுவார்கள்.

குறிப்பாக ஆதார் மையத்தில் மக்களின் நீண்ட வரிசைகளை அகற்றுவதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் எக்ஸ் தளத்தில் வெளியான தகவலின்படி, பொது வசதிகளை மனதில் கொண்டு அஞ்சல் துறையும் ஆதார் அட்டை தொடர்பான சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதுவும் மக்கள் அருகில் உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று தங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம். பின்பு இதற்கான கட்டணமும் ஆதார் மையத்திற்கு இணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான தகவலின்படி, தபால் நிலைய ஆதார் மையங்களில் இரண்டு வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதார் பதிவு (Aadhaar Enrolment): அதாவது பதிவு செயல்பாட்டில் மக்களின் பயோமெட்ரிக் தகவல்களை மின்னணு முறையில் கைப்பற்றுவது செய்யப்படுகிறது. குறிப்பாக இது முற்றிலும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் புதுப்பித்தல் (Aadhaar Updation):இந்த சேவையின் மக்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், முகவரி, பிறந்த தேதி, பயோமெட்ரிக் அப்டேட், புகைப்படம், 10 கைரேகைகள் மற்றும் கருவிழி ஆகியவற்றைப் புதுப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்டபடி, இந்தியா முழுவதும் 13,352 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த தபால் நிலையங்களில் இந்த வசதி உள்ளது என்பதை அறிய, இந்தியா போஸ்டின் இணையதளமான https://www.indiapost.gov.in/ ஐப் பார்வையிடலாம்.
அதேபோல் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு பத்து (10) வருடங்களுக்கும் ஒருமுறை தங்களது அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மேலும் ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்கள், சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








