Home
News

IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு Work from Home நீட்டிப்பு! எப்போது வரைக்கும் தெரியுமா?

மார்ச் மாதம், கொரோனா தொற்று காரணமாக, வீட்டிலிருந்து பணி புரிவதை எளிதாக்க, யோசப்-களுக்கான சில விதிமுறைகளை DoT தளர்த்தியது. வீட்டிலிருந்து பணி புரிவதற்கான கால அளவு ஜூலை 31ம் தேதி வரை என்று முன்பு நீட்டிக்கப்பட்டது. தற்பொழுது இந்த காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று DoT அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்து பணி புரிய

கொரோனா தொற்று காரணமாக, பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரியுமாறு அறிவுறுத்தியது. தொற்றுப்பரவாமல் இருக்க அனைவர்க்கும் ஜூலை 31ம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டது. இன்னும் நிலைமை சீராகாத நிலையில் இருப்பதால், தொற்று பரவாமல் இருக்க வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை டிசம்பர் 31ம் தேதி வரை DoT நீடித்துள்ளது.

IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு

வீட்டிலிருந்து வேலை செய்யும் கால அளவு ஜூலை 31ம் தேதி என்று முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி இறுதி வாரத்தை நெருங்கிவிட்ட நிலையில், அரசாங்கம் புதிதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. IT மற்றும் BPO நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து பணிகளைச் செய்யும் Work from Home வசதிக்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31ம் தேதி வரை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சார்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிவது இன்னும் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்து தற்பொழுது அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை நேற்று இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சுமார் 85 சதவிகிதம் பேர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவின் பரவல் இன்னும் கட்டுக்குள் வராமல் இருப்பதினால் மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் IT துறையில் மொத்தமாக சுமார் 85 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Government Extends Work From Home Norms For IT Companies till December 31 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X