Home
News

டிசம்பர் 14 கடைசி.. ஆதார் அட்டை வச்சிருந்தா அலெர்ட்.. இல்லன்னா வீண் செலவு.. ஏன்?

இந்திய மக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்று. வங்கி, போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் ஆதார் இந்த அட்டை தேவைப்படுகிறது. அதேபோல் கேஒய்சி சரிபார்ப்பிற்குத் தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு தான் முன்னிலையில் இருக்கிறது.

குறிப்பாக ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் ஆன்லைனில் இந்த விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல் ஆதாரில் உள்ள அனைத்து தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை இதில் தவறாக இருந்தால் அரசு தொடங்கும் முக்கியமான திட்டங்களை மக்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது.

டிசம்பர் 14 கடைசி.. ஆதார் அட்டை வச்சிருந்தா அலெர்ட்..

எனவே ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு பத்து (10) வருடங்களுக்கும் ஒருமுறை தங்களது அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

மேலும் ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்கள், சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்க வரும் டிசம்பர் 14 -தான் கடைசி தேதி என்று கூறப்படுகிறது.

எனவே வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் டிசம்பர் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் எளிமையான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

வழிமுறை-1: முதலில் ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் மை ஆதார் (my aadhaar) என்பதை கிளிக் செய்தவுடன் கீழே தோன்றும் மெனுவில் இருந்து உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் (அப்டேட் செய்யவும்) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அதன்பின்னர் ஆதார் எண் மற்றும் கேப்சாக சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பிறகு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த OTP உதவியுடன் உள்நுழைய முடியும். அடுத்து உங்கள் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பாருங்கள்.

வழிமுறை-3: குறிப்பாக இந்த சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.இதற்காக நீங்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். இதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள்.

டிசம்பர் 14 கடைசி.. ஆதார் அட்டை வச்சிருந்தா அலெர்ட்..

வழிமுறை-4: இப்போது உங்களது அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள், அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் கண்டிப்பாக 2 மெகா பைட்டை விட குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-5: அடையாள அட்டையும், முகவரி ஆவணமும் JPEG, PNG or PDFஃபார்மட்டில் இருத்தல் வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு கன்ஃபர்மேஷன் மெசேஜ் ஒன்று வரும். மேலும் ஒரு யுனிக் அப்டேட் ரெஃபரன்ஸ் நம்பர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும். இதை வைத்து உங்களது விவரங்கள் அப்டேட் ஆனதைக் எளிமையாகக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
government extended deadline for free Aadhaar card update till December 14: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X