Home
News

வண்டியில் FASTag இல்லையா.. இனி எக்ஸ்ட்ரா கட்டணம்.. சுங்கச் சாவடிகளில் புது ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளே கவனம்..

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாகியுள்ளது. குறிப்பாக இனி FASTag கட்டாயம், இல்லையெனில் யுபிஐ மூலம் 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

முன்பு சுங்கச்சாவடிகளை நாம் கடந்து செல்லும்போது வானத்தை நிறுத்தி பணமாகச் செலுத்தி மீதமுள்ள தொகை வாங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதுவும் இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டி நிலைமையும் உண்டானது.

வண்டியில் FASTag இல்லையா.. இனி எக்ஸ்ட்ரா கட்டணம்..

அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில் சுங்கச்சாவடிகளிலேயே பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பிறகு ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்த பிறகு இது முற்றிலுமாக மாறிவிட்டது. சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அனைத்து வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருந்து. இது வாகன உரிமையாளரின் வங்கி கணக்கோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.

ஆகவே சுங்கச்சாவடி கடந்து செல்லும்போது தானாகவே ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஃபாஸ்டேக் வசதி வந்தது முதல் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது பெருமளவு குறைந்து இருக்கிறது. இதன்மூலம் எரிபொருளும், நேரமும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை முழுமையாக மாறி உள்ளது. அதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும நெடுஞ்சாலை அமைச்சம் அறிவித்த புதிய விதிகளின்படி, ஏப்ரல் 10 முதல் அனைத்து டோல் பிளாசாக்களிலும் ரொக்கம் முற்றிலும் நீக்கப்பட்டு 100 சதவீதம் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய விதிமுறை தினசரி பயணிகளின் அனுபவத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுவும் புதிய நடைமுறையின்படி, இனி சுங்கக் கட்டணம் செலுத்தும் அனைத்து வாகனங்களும் ஃபாஸ்டேக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாய்ப்பு இல்லை. அதற்கு அதற்குப் பதிலாக UPI உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் மூலம் கட்டணம் செலுத்தலாம். ஆனாலும் அதற்கான கட்டணத்தை விட 1.25 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். குறிப்பாக டிஜிட்டல் கட்டணம் செலுத்த மறுக்கும் வாகனங்களுக்கு வழி மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வண்டியில் FASTag இல்லையா.. இனி எக்ஸ்ட்ரா கட்டணம்..

அதேசமயம் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றால் இ-நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த இ-நோட்டீஸ் வந்த பிறகு மூன்று நாட்களுக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால், இரட்டிப்பு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும். தேவையான பட்சத்தில் வாகனம் சுங்கப் பாதையிலிருந்து அகற்றப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.3000 இருந்த ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம் இப்போது ரூ.3075-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த பாஸ் இருந்தால் 200 முறை வரைசுங்கச்சாவடியை கடப்பதற்கு அனுமதிக்கப்படும். அதேபோல் பயணத்தில் இடையூறு தவிர்க்க, ஃபாஸ்டேக் செயலில் இருப்பதையும், KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Government Ends Cash Toll Payments, Makes FASTag Compulsory: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X