Home
News

டெலி மார்க்கெட்டிங் போன் எண்களைத் தடை செய்திருக்கும் மத்திய அரசு

By Karthikeyan
டெலி மார்க்கெட்டிங் போன் எண்களைத் தடை செய்திருக்கும் மத்திய அரசு
கடந்த ஜூலை மாதம் வரை டெலி மார்க்கெட்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத 51,000 போன் நம்பர்களை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. அதோடு 88,300 வாடிக்கையாளர்கள் முறையாக பதிவு செய்யாமல் டெலி மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவதாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த தகவலை மாநிலங்களுக்கான தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மிலின்ட் டியோரா கடந்த வாரம் மாநிலங்களவையில் வெளியிட்டிருக்கிறார். தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் 2010 சட்டத்தின் படி டெலி மார்க்கட்டிங் செய்வதற்கு முறையாக அனுமதி பெறாமல் போன் எண்களை இத்தகைய வியாபார அதாவது டெலி மார்க்கெட்டிங்கிற்காகப் பயன்படுத்தக் கூடாது.

மேலும் வியாபார நோக்கத்துடன் எஸ்எம்எஸ்களை அனுப்பும் பதிவு பெறப்படாத போன் எண்களையும் இந்திய அரசு மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் ஏற்கனவே இப்படிப்பட்ட டெலி மார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவர்களுக்க எதிராக நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றனர். மேலும் இப்படிப்பட்ட டெலி மார்க்கெட்டிங் எஸ்எம்எஸ்களைக் குறைப்பதற்காக ஒரு நாளில் ஒரு சிம் கார்டிலிருந்து 200 எஸ்எம்எஸ்கள் தான் அனுப்ப வேண்டும் என்ற விதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த தொலைத் தொடர்புத் துறை அமல்படுத்தி இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X