இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

Posted By: Staff
இனி தினமும் 20 எஸ்எம்எஸ் அனுப்பலாம்!

வதந்தி பரவுவதை தடுக்க நாள் ஒன்றுக்கு 5 எஸ்எம்எஸ் என்று மத்திய அரசின் மூலம் நாடு முழுவதம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட உத்தரவு தளர்த்தப்பட உள்ளது.

இதனால் இனி நாள் ஒன்றுக்கு 20 எஸ்எம்எஸ் என்று அறிவிக்கப்படுகிறது.  வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான எஸ்.எம்.எஸ், நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் பொய்யான எஸ்எம்எஸ் பரப்பப்பட்டது. இதனால் வடகிழக்கு மாநிலத்தவர் பெரும் அதிர்ச்சிக்கும், பாதிப்புக்கும் உள்ளானர்.

தகவல்களை கண் இமைக்கும் நேரத்திற்குள் எளிதாக மொபைல்கள் மூலம் பரிமாறி கொள்ள பயன்பட்டு வந்த எஸ்எம்எஸ் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சமயங்களில், எஸ்எம்எஸ் மூலம் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் தகவலை யாரும் எதிர்பார்க்கவில்லை தான்.

ஆனால் வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தவறான எஸ்எம்எஸின் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு நாளைக்கு வெறும் 5 எஸ்எம்ஸ்கள் தான் அனுப்ப முடியும் என்று உத்தரவு விடத்திருந்தது.

இது மட்டும் அல்லாமல் மறு உத்தரவு வரும் வரை இதில் எந்த மாற்றமும் நடக்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் உத்தரவு பிரப்பித்திருந்தது மத்திய அரசு. இதை தொடர்ந்து 5 எஸ்எம்எஸ் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி, ஒரு நாளைக்கு 20 எஸ்எம்எஸ் என்று அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot