நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற OTT சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடு.! மத்திய அரசு.!

|

அண்மை காலத்தில் ஓடிடி சேவைகள் ஆனது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது என்று தான் கூறவேண்டும். இவற்றில் பெரும்பாலான ஓடிடி மேடைகள் மாதச் சந்தா அடிப்படையில் உள்ளடக்கத்தை வழங்குகின்றன. சொந்த தயாரிப்புகள் பிரிமியம் கட்டணச்
சேவையாக அளிக்கப்படுகின்றன.

கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்

இந்நிலையில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற சில ஓடிடி மேடைகளில் வெளியாகும் வீடியோக்கள், திரைப்படங்கள், சீரியல்கள் போன்றவை மத்திய அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

உள்ளிட்ட ஓடிடி எனப்படும் ஸ்டிரீமிங்

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி எனப்படும் ஸ்டிரீமிங் சேவை நிறுவனங்களை தகவல் ஒளிபரப்பு அமைக்கசத்தின் கீழ் அரசு கொண்டு வந்துள்ளது.

சும்மா புகுந்து விளையாடலாம்: ரூ.599-க்கு வரம்பற்ற டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்!சும்மா புகுந்து விளையாடலாம்: ரூ.599-க்கு வரம்பற்ற டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்!

பு இந்த சேவைகள் மின்னணு மற்றும்

இதற்கு முன்பு இந்த சேவைகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைக்கசத்தின் பார்வையில் இருந்தன. குறிப்பாக தணிக்கை இல்லாத கட்டற்ற சுதந்திரத்தால் இணைய வெளியில் ஆபாசம், வன்முறை தீவிரவாதத்தை தூண்டும் கருத்துகள், மத ரீதியான விரோதத்தைத் தூண்டுதல் தலைவர்களை அவதூறு செய்தல் போன்ற குற்றங்கள் பெருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்துதான் மத்திய அரசு அதனைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

குடியரசுத் தலைவர்

மேலும் இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அரசாணையில், ஆன்லைன் திரைப்படங்கள், டிஜிட்டல் செய்தி சேனல்கள், சமூக விவகாரங்கள் போன்றவை தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

அதேபோல் ஓடிடி மேடைகளக்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனும் வாத்திற்கு மத்தியில், இந்த மேடைகளுக்கான அமைப்பான, இந்திய இணையம் மற்றும் மொபைல் (IAMAI) சங்கம், சுய கட்டுப்பாட்டு யோசனையை முன்வைத்தது. ஆனாலும் இந்த யோசனை தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது.

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விவோ எக்ஸ் 60, விவோ எக்ஸ் 60 ப்ரோ- வெளியான தகவல்!எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விவோ எக்ஸ் 60, விவோ எக்ஸ் 60 ப்ரோ- வெளியான தகவல்!

 ஆபாச உள்ளடக்கத்தை

மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை, ஸ்டிரீமிங் உள்ளடக்கத்திற்கு ஓடிடி நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. ஆபாச உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த இது அவசியம் என்று கருத்தப்பட்டாலும், இது தணிக்கைக்கு வழி வகுக்கும் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Government control over OTT platforms such as Netflix, Amazon prime and other digital content: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X