மொபைல் போன் லொகேஷன் டிராக்கிங்.. செயல்பாட்டில் வைக்க அரசு திட்டம்.. சைலெண்ட்டாக கிளம்பும் எதிர்ப்பு!
லொகேஷன் டிராக்கிங் (location tracking) என்று அழைக்கப்படும் இருப்பிட கண்காணிப்பு முறையை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருப்பதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அங்கம் விகிக்கும் 'செல்லுலார் ஆப்பரேட்டர்கள் இந்தியா' சங்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு யோசனை முன் மொழியப்பட்டது. அதுதான் தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

லொகேஷன் டிராக்கிங்
அவர்கள் தற்போது முன்வைத்த யோசனையில் போலீஸ், சி.பி.ஐ.இ போன்ற நாட்டின் விசாரணை அமைப்புகள், மொபைல் போன் பயனர்களின் இருப்பிடம் கோரி சட்ட ரீதியாக மொபைல்போன் ஆப்பரேட்டர்களை அணுகுகின்றனர். ஆனால் அப்போது துல்லியமான இருப்பிடத்தை வழங்க முடிவதில்லை.
குறிப்பாக மொபைல் போன் பயனர்களின் சிம் கார்டு கடைசியாக எந்த டவர்களை பயன்படுத்தியதோ அந்த தரவுகளின் அடிப்படையிலேயே பொதுவான இருப்பிடம் கிடைக்கிறது.
ஆனால் செயற்கைகோள் தரவு மற்றும் மொபைல் போனின் இணைய வசதி இரண்டையும் பயன்படுத்தி துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிய முடியும். எனவே தான் அனைத்து மொபைல் போன்களிலும் இந்த இருப்பிட வசதி (லொகேஷன் டிராக்கிங்) செயல்பாட்டிலேயே இருக்க செய்வதை கட்டாயமாக்க வேண்டும். மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இதற்கான உத்தரவை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தற்போது மத்தி அரசு இதை பரிசீலிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் உறுப்பினராக உள்ள இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அந்த சங்கம் எழுதிய கடிதத்தின் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.
அதில் செல்லுலார் ஆப்பரேட்டர்கள் யோசனையைச் செயல்படுத்தினால் அது உலகின் எங்கும் இல்லாத மிகை கண்காணிப்பு முறையாக மாறிவிடும். அதுவம் ராணுவம், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் போன்ற முக்கிய நபர்களின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாக்கும் என்று எச்சரித்து உள்ளது.
சஞ்சார் சாத்தி செயலி
அதேபோல் சமீபத்தில் நாட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த செயலி திருடு போன மொபைல் போன்களை கண்டறியவும், ஆன்லைன் சைபர் குற்ற மோசடிகளை தடுக்கும் நோக்கத்திலும் உருவாக்கப்பட்டது.
இந்த செயலியை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் கட்சியினர் மக்களை உளவு பார்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டினர். இந்த சர்ச்சையால் தற்போது சஞ்சார் சாத்தி கட்டாயம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதார் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.
ஆதார் அப்டேட்:
அதன்படி, இந்த டிசம்பர் மாதத்தில் ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் வர உள்ளன. அதாவது ஆதார் அட்டை புதிய வடிவில், புகைப்படம் மற்றும் QR குறியீட்டுடன் மட்டும் வரலாம் எனவும், முகவரி விவரங்கள் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆதார் ஆதார் அட்டை 'புகைப்படம் + QR கோடு' வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆதார் அட்டையில் வரும் இந்த மாற்றம் குறித்த தகவலை இந்திய தனித்துவ அடையாள அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாக நாம் சிம் கார்டு வாங்கு போதும். ஹோட்டலில் சென்று தங்கும் போதும், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் போதும் நமது ஆதார் அட்டையை அங்கே கொடுத்துச் சரிபார்ப்பு செய்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது.
இவ்வாறு நமது ஆதார் அட்டை நகல்களைச் சமர்ப்பிக்கும் போது சில மோசடியாளர்கள் கைகளில் அவை சிக்கி தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் டிசம்பர் மாதத்திலிருந்து ஆதார் அட்டை "புகைப்படம் + QR கோடு" வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருகிறது. எனவே ஆதாரை அச்சிட்டுக் கொடுப்பது முற்றிலும் தவறு. அட்டையில் படம், QR கோடு கோடு மட்டும் இருந்தால் போதும் என புவனேஷ் குமார் வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications








