Home
News

கெடுவுக்குள் பணம் வரணும்: ரூ.76,745 கோடியை மொத்தமா கொடுங்க: Vodafone மூடுவிழாவா?சிக்கலில் Airtel

மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

மொத்தம் 1.47 லட்சம் கோடி நிலுவை

மொத்தம் 1.47 லட்சம் கோடி நிலுவை

அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.47 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

வரலாறு காணாத நஷ்டம்

வரலாறு காணாத நஷ்டம்

வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.

ஏர்டெல் நிறுவனமும் நஷ்டம்

ஏர்டெல் நிறுவனமும் நஷ்டம்

ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியது.

ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு

மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு

இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடனடியாக தொகையை செலுத்துங்கள்

உடனடியாக தொகையை செலுத்துங்கள்

இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

பாரதி ஏர்டெல் பதில்

பாரதி ஏர்டெல் பதில்

இந்நிலையில், பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாரதி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்தது.

முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்

முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்

இதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாக அறிவித்தது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

இதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாரதி எர்டெல், பார்தி ஹெக்ஸாகாம், டெலிநார் ஆகியவற்றின் சார்பில் ரூ.10 ஆயிரம் கோடி ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ஒருபகுதியைச் செலுத்திவிட்டோம். எங்களின் சுயமதிப்பீட்டுப் பணியை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், இதை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக பணத்தைச் செலுத்திவிடுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டது. பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்கு இன்னும் ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.35 ஆயிரத்து 586 கோடி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் கோரிக்கை

வோடபோன் கோரிக்கை

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வோடபோன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வோடபோன் நிறுவனம் முதல்கட்டமாக ₹2,500 கோடி செலுத்துவதாகவும், மேலும் ₹1,000 கோடியை அடுத்த ஐந்து நாட்களுக்குள் செலுத்துவதாகவும் கூறி, நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா செலுத்த வேண்டிய தொகை

வோடபோன் ஐடியா செலுத்த வேண்டிய தொகை

வோடஃபோன் - ஐடியா நிறுவனம் ரூ.53,038 கோடி செலுத்த வேண்டியிருக்கும் நிலையில், ரூ.3,500 கோடியை மட்டுமே அந்நிறுவனம் செலுத்தியுள்ளது. அதன்படி வோடபோன் நிறுவனம் பாக்கி வைத்துள்ள ரூ.49,538 கோடி செலுத்த வேண்டியுள்ளது.

பாக்கி செலுத்த வேண்டிய நிறுவனங்கள்

பாக்கி செலுத்த வேண்டிய நிறுவனங்கள்

அதேபோல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 3.96 கோடி ரூபாய் செலுத்தியதை அடுத்து 21ஆயிரத்து 135 கோடி ரூபாய நிலுவை உள்ளது என்றும் அதேபோல் டாடா டெலிசர்வீசஸ் நிலுவை வைத்துள்ள 11ஆயிரத்து, 625 கோடி ரூபாயில் 2,197 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொது துறையைச் சார்ந்த பி.எஸ்.என்.எல்., 4,989 கோடி ரூபாய், எம்.டி.என்.எல்., 3,122 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாக்கி வைத்துள்ள ரூ.76,746 கோடி

பாக்கி வைத்துள்ள ரூ.76,746 கோடி

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையில் இதுவரையில் ரூ.25,701 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பாக்கி வைத்துள்ள ரூ.76,746 கோடியை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தரப்பில் நோட்டீஸ்

அரசு தரப்பில் நோட்டீஸ்

இந்நிலையில் ஒழுங்குமுறைக் கட்டணம் முழுவதையும் நிறுவனங்கள் விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பாக்கி இருக்கும் ரூ.76,746 கோடியைச் செலுத்தும்படி, ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகுதி பகுதியா வேண்டாம் மொத்தமாக கொடுங்கள்

பகுதி பகுதியா வேண்டாம் மொத்தமாக கொடுங்கள்

மேலும் நிலுவை தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுபடி அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தொகையை பகுதி பகுதியாக செலுத்தாமல் முழுவதுமாக செலுத்தும்படி அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Government asks Airtel, Vodafone Idea, others to pay balance AGR dues
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X