இனி பேங்க் போக அவசியம் இருக்காது.. ரேஷன் கடைகளில் வருகிறது புதிய வசதி.. இனி பணத்தை சுலபமாக பெறலாம்..
தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுடன் (tamilnadu ration shop) இணைந்து வங்கி சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ரேஷன் கடைகளில் மக்களின் நன்மைக்காக மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரேஷன் வாங்கும் மக்களுக்கு குறைவின்றி அனைத்து பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் சாதாரண மக்களுக்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது அரசு வழங்கும் ஓய்வூதியங்கள், பொங்கல் பரிசு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
குறிப்பாக பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை டெபிட் கார்டுகள் மூலம் ஏடிஎம்-களில் எடுக்க முடிகிறது. ஆனால் சில கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் ஏடிஎம் வசதிகள் இருப்பதில்லை. எனவே அங்குள்ள மக்கள் பணத்தை எடுக்கச் சிரமப்படுகின்றனர் என்று தான் கூறவேண்டும்.
எனவே வங்கி ஏடிஎம்களை எளிதில் அணுக முடியாத கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளை டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் மைக்ரோ ஏடிஎம்களாகவும் (micro ATMs) மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் சொல்லும்போது, அனைத்து ரேஷன் கடைகளும் மைக்ரோ ஏடிஎம்களாக மாறும்போது ஆதார் எண் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் அரசு புள்ளி விவரம்படி தற்போது 34 லட்சம் பேர் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுகிறார்கள். அவர்களில் 2.7 லட்சம் பேர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழியாகப் பணம் பெறுகிறார்கள். இவர்களால் ஏடிஎம்களை பயன்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு கொண்டுவரும் புதிய நடைமுறையில் கிராமப்புற மக்களும் ரேசன் கடை மைக்ரோ ATM-கள் மூலம் பண சேவையைப் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் ரேஷன் கடைகளில் ஏடிஎம் சேவை கொண்டுவருவதன் மூலம் வங்கி பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு போடும் பணத்தை மினிமம் பேலன்ஸ் இல்லை என்று வங்கிகள் பிடிக்காமல் இருந்தால் சரி என சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சமீபத்தில் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதுவும் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மேற்கொள்ளும் வகையில் முழு நேர ரேஷன் கடைகளுக்கு இயந்திரங்கள் மாற்றி வழங்கப்பட்டது. குறிப்பாக இப்போது கண் கருவிழி பதிவு இயந்திரம் வாயிலாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








